இல்லத்தரசிகள் அனைவரும் சமையலறையில் பலவித நிகழ்வுகளை சந்திக்கின்றனர். உணவு சமைப்பது அவ்வளவு எளிதில் அல்ல. கொஞ்சம் கவனம் சிதறினாலும் பால் பொங்குவது குழம்பு கருகுதல் வரை அனைத்து சம்பவங்களையும் பார்க்க வேண்டியிருக்கும்.
பாத்திரத்தில் சமைத்தால் அடிக்கடி செய்யக் கூடிய உணவு பொங்கும் என்பதால் குக்கரில் சமைக்கப்படுகிறது. ஆனால் சில குக்கரில் விசில் வரும் போது சமைக்கின்ற உணவும் பொங்கி வெளியில் வந்துவிடும்.
இதனால் உணவு வீணாவதோடு குக்கர், அடுப்பு மற்றும் சுவரில் பட்டு அதை சுத்தம் செய்வதற்குள் பெரும் பாடாகிவிடும்.புதிதாக வாங்கிய குக்கரில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவது குறைவு தான்.ஆனால் குக்கரில் தொடர்ந்து சமைப்பதால் கேஸ்கட், வெயிட் போன்றவை சேதமடைகிறது. இதனால் குக்கர் விபத்து, குக்கரில் இருந்து உணவுகள் பொங்கி வருதல், சில நேரம் குக்கர் விசில் வராமல் இருத்தல் போன்றவை ஏற்படும்.
எனவே குக்கரில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் பின்பற்றுங்கள். ஒவ்வொரு முறை குக்கரில் சமைத்த பின்னரும் தண்ணீர் கொண்டு குக்கரை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கேஸ்கட், வெயிட் போன்றவற்றை நன்கு சுத்தம் செய்யவேண்டும். குக்கர் விசில் ஓட்டையில் அடைப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கேஸ்கட்டை வெயிலில் வைப்பதை தவிர்க்கவும். இதுபோன்ற விஷயங்களை தவறாமல் பின்பற்றி வந்தால் குக்கர் விபத்து, குக்கரில் சாதம், குழம்பு பொங்கி வருதல் போன்றவை ஏற்படமால் இருக்கும்.