இந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமா? தேமுதிக தலைவர் எடுத்த நடவடிக்கை!!

0
154
Is the job permanent for these employees? Action taken by DMDK leader !!
Is the job permanent for these employees? Action taken by DMDK leader !!

இந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரமா? தேமுதிக தலைவர் எடுத்த நடவடிக்கை!!

சில ஆண்டுகளாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்து வருகிறார். விஜயகாந்த் மட்டுமே நம்பிய தொண்டர்கள் அவர் பேச முடியாமல் போனதையடுத்து பெருமளவு வருத்தம் அடைந்தனர். தற்பொழுது கட்சியின் பொருளாளராக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா கட்சியின் முக்கியப் இடங்களுக்கு செல்வது சலுகைகள் வழங்குவது என அனைத்திலும் கலந்து கொள்கிறார். தேமுதிக  தலைவர் விஜயகாந்தை பெரும்பான்மையாக வெளியிடங்களில் பார்க்க முடியவில்லை.

சமீபத்தில் அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதிலிருந்து அவர் ஓய்வில் இருக்கிறார். இவரது பேச்சை இவருக்கு பெரும்பான்மையான வாக்கை சேகரித்து தரும். அதுமட்டுமின்றி இவர் தற்பொழுது கட்சியின் முக்கிய பகுதிகளில் இல்லாததே தேமுதிக பின்னாடி அதற்கு முக்கிய காரணம். தேமுதிக நிர்வாகிகள் பலர் வேறு கட்சியை நோக்கி செல்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு தேமுதிக பொருளாளர் ,வேட்பாளர்கள் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலானது.

ஏனென்றால் எப்பொழுதும் கூலர்ஸ் அணிந்துகொண்டு கம்பீரமான பேச்சால் மக்களை கவரும் விஜயகாந்த், தற்பொழுது மெலிந்த உடல் நிலையில் இருந்தார். அதை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு இருக்கையில் நேற்று விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அது என்னவென்றால், 10 ஆண்டுகளாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையிலேயே 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பலகாலமாக அவர்களை பணி நிரந்தரம் செய்ய பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை தமிழக அரசு அதனை கண்டு கொள்ளவில்லை.

தற்பொழுது அதற்கு மாறாக தினக்கூலி பணியாளர் களை நீக்கிவிட்டு அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்களில் இருந்து ஊழியர்களை புதிதாக நியமிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான முடிவுகளை பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இவ்வாறு தினக்கூலி பணியாளர்களை நீக்கிவிட்டு புதிதாக ஊழியர்களை அமர்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே தமிழக அரசு இந்த 400 ஊழியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பார்த்து அவர்களை நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் ,தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை பணி நியமனம் செய்தால் தனியார் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள் மட்டுமே பயன் அடைய முடியும். இவ்வாறான தினக்கூலி ஊழியர்கள் பெருமளவு சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று அறிக்கையில் தேமுதிக தலைவர் கூறியுள்ளார்.

Previous articleதோனியிடம் நான் நிறைய கற்றுள்ளேன் அதில் முக்கியமாக: பேட்டியில் டு பிளெஸ்சி கூறிய பதில்!
Next articleசீக்கியர்கள் விமான நிலையங்களுக்கு கிர்பான் (கத்தி) எடுத்து செல்ல தடை? விமான போக்குவரத்தின் அதிரடி நடவடிக்கை!!