உங்களில் சிலர் மூட்டு பகுதியில் அடிபட்டு ஜவ்வு பிய்ந்து கடுமையான வலி மற்றும் வீக்கத்தை அனுபவித்து வருவீர்கள்.இதுபோன்று ஜவ்வு பியிதல் மற்றும் ஜவ்வு தேய்மானம் ஏற்பட்டால் அதை மூலிகை மருத்துவம் மூலம் எளிதில் குணப்படுத்தி கொள்ள இயலும்.
தேவையான பொருட்கள்:-
1)வேலிப்பருத்தி
2)வல்லாரை கீரை
செய்முறை:-
சிறிதளவு வேலிப்பருத்தி இலை எடுத்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.அதேபோல் 1/4 கைப்பிடி வல்லாரையை உரலில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் 20 மில்லி வேலிப்பருத்தி சாறு மற்றும் 20 மில்லி வல்லாரை கீரை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.இதை மூட்டு பகுதியில் அப்ளை செய்து காட்டன் துணி வைத்து கட்டு கட்டவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஜவ்வு தேய்மானப் பிரச்சனை சரியாகும்.
மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)திப்பிலி
2)வில்வ இலை
3)பன்னீர் ரோஜா
4)வெற்றிலை
5)நெய்
6)பிரண்டை
செய்முறை:-
உரலில் நான்கு திப்பிலி,மூன்று வில்வ இலை,ஒரு பன்னீர் ரோஜா பூவின் இதழ்கள் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வெற்றிலையை காம்பு நீக்கி அதன் மேல் நாட்டு பசு நெய் அப்ளை செய்து கொள்ளவும்.பிறகு அரைத்த விழுது சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பிஞ்சு பிரண்டை தண்டு எடுத்து விளக்கில் காட்டி சூடுபடுத்தவும்.இந்த பிரண்டையை பிழிந்து சாறு எடுத்து வெற்றிலையில் சேர்க்கவும்.
பிறகு வெற்றிலையை மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு ஜவ்வு தேய்மானம் நீங்கிவிடும்.