இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் பல அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தது. அதாவது ஒரு தரப்பு மக்களை உயர்த்தியும் மறு தரப்பு மக்களை தாழ்த்தியும் இவர் படம் இயக்கி வருகிறார். இது ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்தது.
இதனால் இயக்குனர் பா.ரஞ்சித் பலவித பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் அவர் அரசியல் கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்க தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தஞ்சாவூர் ராஜராஜ சோழனை பற்றி பேசிய சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் இயக்கப் போகும் படம் சல்பேட்டா பரம்பரை. இப்படத்தில் நடிகர் ஆர்யா நடிக்க உள்ளாராம். மேலும் இப்படத்திலும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் அரசியல் கருத்துக்களை கூறி உள்ளார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. நடிகர் ஆர்யா இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது உடலின் எடையை அதிகரித்து கட்டுமஸ்தான தேகத்துடன் களமிறங்கியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.
இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யா ஒரு பாக்ஸராக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆர்யா ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் படும் கஷ்டங்கள் மற்றும் அவற்றை மீறி அவர் எவ்வாறு முன்னேறுகிறார் என்பதே கதையின் கருவாக உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.