வீட்டில் ஒரே பல்லி தொல்லையா? இனி கவலை வேண்டாம்! இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!
வீட்டில் பல்லிகள் நடமாடுவது சாதாரண ஒன்று தான் என்றாலும் அவை விஷம் நிறைந்த உயிரினம் என்பதால் அதை விரட்டுவது நல்லது.வீட்டின் சுவரில் ஒட்டிக் கொண்டு நம்மை படுத்தி எடுக்கும் பல்லிகளை எளிதில் விரட்டும் ட்ரிக்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1)கற்பூரவல்லி இலை
இரண்டு கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை ஒரு கிளாஸ் நீரில் கலந்து பல்லி நடமாட்டம் உள்ள இடத்தில் தெளிக்கவும்.கற்பூரவல்லி இலை வாசனை பல்லிகளுக்கு ஆகாது.இதனால் அதன் வாசனைக்கு பல்லிகள் தெறித்தோடி விடும்.
2)வெங்காயம்
ஒரு பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பல்லி நடமாட்டம் உள்ள இடத்தில் தூவி விட்டால் வெங்காய வாசனைக்கு பல்லிகள் தெறித்தோடி விடும்.
3)காபி தூள் + புகையிலை தூள்
இரண்டு ஸ்பூன் காபி தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் புகையிலை தூளை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பல்லி நடமாட்டம் உள்ள இடத்தில் வைத்தால் அவை வீட்டை விட்டு ஓடிவிடும்.
4)நாப்தலின்
ஒரு நாப்தலின் உருண்டையை பொடி செய்து பல்லி நடமாட்டம் உள்ள இடத்தில் தூவி விட்டால் பல்லி தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்