பித்தத்தால் ஒரே வாந்தி மயக்கமா.. இதனை 1 முறை குடியுங்கள்!! இனி இந்த பிரச்சனையே வராது!!

Photo of author

By Divya

பித்தத்தால் ஒரே வாந்தி மயக்கமா.. இதனை 1 முறை குடியுங்கள்!! இனி இந்த பிரச்சனையே வராது!!

இக்காலத்தில் யாருக்கு எப்பொழுது எந்த நோய் வருமென்றே சொல்ல முடிவதில்லை.அந்த அளவிற்கு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.அதில் ஒன்று தான் தலைசுற்றல்,வாந்தி,மயக்கம்.இந்த பாதிப்பை சரி செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியங்கள் கைகொடுக்கும்.

தீர்வு 01:

*இஞ்சி
*எலுமிச்சை சாறு

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பின்னர் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை அதில் பிழிந்து கலக்கி அருந்தினால் வாந்தி,தலைசுற்றல்,மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தீர்வு 02:

*இஞ்சி
*சீரகம்

முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு 1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும் இடித்த இஞ்சை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் மயக்கம்,தலைசுற்றல்,வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தீர்வு 03:

*முருங்கை கீரை
*சீரகம்
*கொத்தமல்லி விதை
*பனைவெல்லம்

ஒரு கொத்து முருங்கை இலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.பிறகு அரைத்த முருங்கை விழுதை அதில் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.இதை முருங்கை சாற்றில் சேர்க்கவும்.பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி பனைவெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தி வந்தால் தலைசுற்றல்,மயக்கம்,வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.