இவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறதா??

0
316

இவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறதா??

 

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது,
படித்த வேலைவாய்ப்பற்ற எஸ்.சி மற்றும் எஸ்.டி இளைஞர்கள் தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கும் காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் அனைத்தும் ஒருங்கிணைந்து எஸ்.சி மற்றும் எஸ்.டி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறயிருக்கிறது.

இந்த முகாமில் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்வதற்காக 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் விருப்பம் காட்டி வருகின்றனர். 8-வது தேர்ச்சி, 10-வது, 12-வது, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங், படித்த வேலை நாடுநர்கள் இந்த முகாமில் கலந்து வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.

இந்த முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்கும் எஸ்.சி., எஸ்.டி. வேலை நாட்டுனர்களுக்கும் அனுமதி இலவசம். மேற்கண்ட கல்வி தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் தங்களுடைய உயரிய கல்வி சான்றுகள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் முகாம் காலை 10 மணி முதல் முகாம் நடக்கும் இடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் முகாம் காலை 10 மணி முதல் முகாமிடத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கூறியுள்ளார்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Previous articleசூப்பர் ! இவளோ நாள் தெரியாம போச்சே!!இதை பற்றி உங்களுக்கு தெரியுமா ??
Next articleமாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here