கழிக்கும் மலம் கருப்பு கலர்ல இருக்கா? எச்சரிக்கை இந்த ஆபத்தின் அறிகுறியாக இருக்கலாம்!!

0
15

நம் மலக் குடலில் தேங்கும் கழிவுகள் ஆசனவாய் வழியாக வளியேறுகிறது.இந்த மலக் கழிவுகள் உடலில் தேங்கினால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை முற்றிலும் சிதைத்துவிடும்.நாம் வெளியேற்றும் மலத்தை வைத்தே நம் உடல் ஆரோக்கியத்தை கணித்துவிடலாம்.குழந்தைகளுக்கு மலத்தின் நிறத்தை வைத்து அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெரியவர்கள் அறிவார்கள்.

அதேபோன்று தான் நாம் வெளியேற்றும் மலத்தின் நிறத்தை கொண்டு உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.சிலருக்கு கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும்.இந்த கருப்பு நிற மலம் நாம் உட்கொள்ளும் உணவினாலும் வெளியேறும்.அதாவது நாம் உண்ணும் உணவின் நிறம் கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருந்தால் வெளியேற்றும் மலம் அதே நிறத்தில் இருக்கும்.இது தவிர நம் உடலில் ஏதேனும் ஆரோக்கிய குறைபாடு இருந்தால் கருப்பு நிற மலம் வெளியேறும்.

கருப்பு நிற மலம் வெளியேற காரணங்கள்:

1)நாம் உட்கொள்ளும் மருந்தின் விளைவாக கருப்பு நிறத்தில் மலம் வெளியேறலாம்.

2)வயிற்றில் அல்சர் புண் இருந்தால் கருப்பு நிற மலம் வெளியேறும்.செரிமானப் பிரச்சனை இருப்பவர்களுக்கு கருப்பு நிற மலம் வெளியேறும்.

3)இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் கழிக்கும் மலம் கருமை நிறத்தில் இருக்கும்.

4)வயிற்றில் புண்கள் இருந்தால் கருப்பு நிற மலத்துடன் சில அறிகுறிகள் தென்படும்.அதாவது பசியின்மை,உடல் எடை குறைதல்,வயிற்று வலி,மலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவை குடல் புண்ணிற்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும்.

5)உணவுக் குழாயில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும்.பெருங்குடல் அலர்ஜி பிரச்சனை இருந்தால் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும்.

6)வயிற்றில் கட்டிகள் இருந்தால் வெளியேறும் மலம் கருப்பு நிறத்தில் இருக்கும்.உங்களுக்கு அடிக்கடி கருப்பு நிற மலம் வெளியேறுகிறது என்றால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகி தீர்வு காண்பது நல்லது.

Previous articleகுதிக்கால் வலியால் நடக்க முடியமால் சிரமப்படுறீங்களா? அப்போ இந்த இலையில் கசகசா வச்சி சாப்பிடுங்கள்!!
Next articleஇந்த பொருளை வாயில் வைத்தாலே.. வயிற்றில் உருவான அல்சர் எளிதில் குணமாகிவிடும்!!