முக்கினால் மட்டுமே மலம் வெளியேறுகிறதா? இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிட்டால்.. நொடியில் தீர்வு நிச்சயம்!!
உங்களில் பலர் அன்றாடம் சந்தித்து வரும் பாதிப்பாக மலச்சிக்கல் உள்ளது.காலையில் ஒரு கப் சூடான காபி குடித்தால் தான் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது என்பது பலரின் எண்ணம்.ஆனால் இவ்வாறு செய்து மலத்தை வெளியேற்றுவது என்பது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் செயலாக மாறிவிடும்.
சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் இருத்தலே மலச்சிக்கல் ஏற்பட காரணமாக உள்ளது.எனவே உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.
தேவையான பொருட்கள்:-
*சீரகப் பொடி – 50 கிராம்
*ஓமப் பொடி – 30 கிராம்
*கடுக்காய் பொடி – 30 கிராம்
*நிலாவாரை பூ பொடி – 50 கிராம்
செய்முறை:-
அடுப்பில் ஒரு கடாய் வைத்து 30 கிராம் சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு தட்டிற்கு மாற்றிய 15பின்னரே கிராம் ஓமத்தை கடாயில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் கடுக்காயை லேசான சூட்டில் வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு 30 கிராம் நிலாவாரை பூ(உலர்ந்தது) எடுத்துக் கொள்ளவும்.
இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
இந்த பொடியை பால் அல்லது சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் மலக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.
மற்றுமொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
*தண்ணீர் – ஒரு டம்ளர்
செய்முறை:-
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு சேர்த்து கலக்கி பருகினால் பருகி வந்தால் தேங்கிய கெட்டி மலம் இளகி வெளியேறும்.
தேவையான பொருட்கள்:-
*ஆவாரம் பூ பொடி – ஒரு தேக்கரண்டி
*தண்ணீர் – ஒரு டம்ளர்
*தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி ஆவாரம் பூ பொடி போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் மலம் முழுமையாக வெளியேறிவிடும்.