கருவில் வளரும் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக் கொண்டிருக்கா? இதனால் ஆபத்தா?

Photo of author

By Divya

கருவில் வளரும் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றிக் கொண்டிருக்கா? இதனால் ஆபத்தா?

Divya

கர்ப்பிணி பெண்ணின் கருவில் வளரும் குழந்தைக்கு உயிர் நாடியாக தொப்புள் கொடி திகழ்கிறது.இந்த தொப்புள் கொடியின் மூலம் குழந்தைக்கு இரத்தம் செல்கிறது.குழந்தையின் வயிற்றில் இருந்து நஞ்சு கொடி வரை உள்ள தொப்புள் கொடியின் மூலம் இரத்தம்,ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்கிறது.குழந்தையின் வயிற்றுக்கும் நஞ்சு கொடிக்கும் 21 சென்டி மீட்டர் நீளம் கொண்டு 3 இரத்த நாளங்கள் இருக்கிறது.

இந்த தொப்புள் கொடி சில சமயம் குழந்தையின் கழுத்தை சுற்றிக் கொண்டிருக்கும்.பொதுவாக குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றினால் சிசேரியன் மூலமே பிரசவிக்க முடியும் என்பது அனைவரும் சொல்லும் கருத்தாக இருக்கிறது.

குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி இருப்பதை எண்ணி தாய்மார்கள் கவலையடைய தேவையில்லை.பெரும்பாலும் குழந்தைகள் பிறக்கும் பொழுது தொப்புள் கொடி கழுத்தை சுற்றி தான் இருக்கிறது.இதை கொடி என்றும் மாலை என்றும் சொல்வார்கள்.

தொப்புள் கொடி நீளத்தால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.நீளமான தொப்புள் கொடியால் கழுத்து இறுக்கப்பட்டுவிடுவோமோ என்ற கவலை வேண்டாம்.

கருவில் வளரும் குழந்தையின் கழுத்தை சுற்றி தொப்புள் கொடி சுற்றியிருந்தாலும் இது குழந்தையின் வளர்ச்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.குழந்தையின் செயல்பாடு நன்றாக இருக்கிறது என்றால் நீங்கள் தொப்புள் கொடி கழுத்தை சுற்றி இருப்பதை பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை.

மருத்துவ பரிசோதனையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் நீங்கள் இதை பற்றி எண்ணி கவலை கொள்ள தேவையில்லை.

தொப்புள் கொடி சுத்தலால் சிசேரியன் ஏற்படுமா?

குழந்தைக்கு கழுத்தில் தொப்புள் கொடி சுத்தி இருப்பதால் சிசேரியன் செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை.கருப்பை சுருக்கம்,குழந்தை கருப்பையில் கீழ் நோக்கி நகருதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே சிசேரியன் மூலம் குழந்தை பெற வேண்டிய நிலை ஏற்படும்.