நம் உடலில் வெளிப்புற உறுப்பில் மிகவும் முக்கியமாவையாக திகழும் காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.காதில் அழுக்கு அல்லது பூச்சி புகுந்துவிட்டால் குடைச்சல்,வலி,எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.நாம் அசால்ட்டாக இருக்கும் சமயத்தில் காதுக்குள் பூச்சி,எறும்பு,வண்டு போன்றவை புகுந்துவிடுகிறது.இவ்வாறு புகுந்த பூச்சியை பாதுகாப்பான முறையில் அகற்றுவது குறித்து இங்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
தீர்வு 01:
ஆலிவ் எண்ணெய்
ஐந்து மில்லி அளவு ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி பூச்சி நுழைந்த காது ஓட்டைக்குள் விட்டால் அவை உடனடியாக வெளியேறிவிடும்.
தீர்வு 02:
கல் உப்பு நீர்
20 மில்லி தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து சூடாக்கி கொள்ள வேண்டும்.பிறகு வெது வெதுப்பான பதத்திற்கு தண்ணீர் வந்த பிறகு காது ஓட்டைக்குள் ஊற்றினால் பூச்சி,எறும்பு போன்றவை துடிச்சு வெளியேறிவிடும்.
தீர்வு 03:
தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்
கிண்ணத்தில் 5 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 5 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இந்த எண்ணெயை காது துவாரத்தில் ஊற்றி சிறிது நேரம் காதை மூடுங்கள்.இப்படி செய்தால் பூச்சி செத்து வெளியே வந்துவிடும்.
தீர்வு 04:
ஆல்கஹால்
பூச்சி புகுந்த காதிற்குள் சில துளிகள் ஆல்கஹால் விட்டால் அவை வெளியேறிவிடும்.அதேபோல் பூண்டு பல்லை நறுக்கி நல்லெண்ணெயில் சூடுபடுத்தி ஆறவைத்து வடித்து கொள்ள வேண்டும்.இதை காதில் விட்டால் பூச்சி வெளியேறிவிடும்.
காதில் பூச்சி புகுந்த பின் செய்யக் கூடாதவை:
*பட்ஸ் பயன்படுத்தி காதிற்குள் புகுந்த பூச்சியை அகற்ற முயற்சி செய்யாதீர்கள்.காதுக்குள் பட்ஸ் விட்டால் பூச்சி உள்ளே சென்றுவிடும்.
*காதுக்குள் விரல்களை விடக் கூடாது.இதனால் பூச்சி உள்ளே செல்ல வாய்ப்பிருக்கிறது.சேஃப்டி பின்,தீக்குச்சி,கோழி இறகு போன்றவற்றை காதிற்குள் விடுவதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் சூடான எண்ணெயை காதுக்குள் விடுவதை தவிர்க்க வேண்டும்.காதில் இரத்தம் வந்தாலோ அல்லது வலி அதிகமானாலோ அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.