கை மற்றும் கால் முட்டிகளில் கருமையான நிறம் இருக்கின்றதா?? அதை சரி செய்ய இந்த மூன்று பொருட்கள் போதும்!! 

Photo of author

By Sakthi

கை மற்றும் கால் முட்டிகளில் கருமையான நிறம் இருக்கின்றதா?? அதை சரி செய்ய இந்த மூன்று பொருட்கள் போதும்!!
கைகள் மற்றும் கால்களில் முட்டியில் இருக்கும் கருமையான நிறத்தை போக்க இந்த பதிவில் வெறும் மூன்றே பொருட்களை வைத்து அருமையான ஒரு மருந்து தயாரித்து எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
ஒரு சிலருக்கு கைகளில் இருக்கும் முட்டிப் பகுதிகளிலும் கால்களில் இருக்கும் முட்டிப் பகுதிகளிலும் கருமையான நிறம் இருக்கும். இதை சரி செய்ய அதாவது அந்த கருமையான நிறத்தை போக்கி சருமத்தின் நிறத்தை வரவைக்க பலரும் பலவித முயற்சிகளை எடுத்து வருகின்றது.
ஒரு சிலருக்கு கருமையான நிறம் லேசாக மறையும். ஒரு சிலருக்கு அந்த கருமையான நிறம் என்ன செய்தாலும் அப்படியே இருக்கும். அந்த ஒரு சிலருக்கு இந்த பதிவின் மூலம் முட்டிகளில் இருக்கும் கருமையான நிறத்தை மறைய செய்ய அருமையான குறிப்பு ஒன்றை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* தயிர்
* அரிசி மாவு
* காபித் தூள்
செய்முறை…
இதை தயார் செய்வது சுலபமான செயல்முறை தான். ஒரு சிறிய பவுல் ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் அரிசி மாவு தேவையான அளவு சேர்த்து சிறிதளவு தயிர் சேர்த்து அத்துடன் இறுதியாக காபித் தூளை சேர்க்க வேண்டும். பின்னர் இதை நன்கு கலந்து கொள்ள வேண்டும். முட்டிகளில் உள்ள கருமையான நிறத்தை போக்கும் மருந்து தயார்.
பயன்படுத்தும் முறை…
இந்த மருந்தை எடுத்து கை மற்றும் கால்களின் முட்டிப் பகுதியில் கருமையான நிறம் உள்ள இடத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். 15 நிமிடங்களுக்கு பின்னர் அந்த கலவை காய்ந்த பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறிது ஸ்க்ரப் செய்ய வேண்டும். இறுதியாக தண்ணீர் ஊற்றி கழுவி விட்டால் போதும். இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.