சிறுநீர் கழிக்கும் பாதையில் வலி எரிச்சல் அதிகம் இருக்கிறதா? இதை செய்தால் ஒரே நாளில் முழுமையான தீர்வு கிடைக்கும்!

Photo of author

By Divya

சிறுநீர் கழிக்கும் பாதையில் வலி எரிச்சல் அதிகம் இருக்கிறதா? இதை செய்தால் ஒரே நாளில் முழுமையான தீர்வு கிடைக்கும்!

உடலில் தேங்கி கிடக்கும் கழிவுகள் சிறுநீர் மற்றும் மலம் வழியாக வெளியேற்ற பட்டுகிறது.இவை இரண்டும் முறையாக நடக்காவிட்டால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.

ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் அதிகளவு வலி மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படும்.இந்த பாதிப்பை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே வலி புரியும்.இந்த பாதிப்பு சிறுநீர் பாதையில் தொற்று,கிருமிகள் இருந்தால் ஏற்படும்.இவை முதலில் சாதாரண பாதிப்பாக இருந்து பின்னாளில் தீவிர நோய் பாதிப்பாக மாறிவிடும்.

உடலை சூடாக்கும் உணவுகள்,பானங்களை அதிகம் அருந்தினால் வலி,எரிச்சல் மிகுந்த சிறுநீர் வெளியேறும்.உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் 10 முதல் 15 டம்ளர் அருந்தி வர வேண்டும்.ஆனால் இன்று பெரும்பாலானோர் தினமும் 1 லிட்டர் தண்ணீர் கூட அருந்துவது கிடையாது.

உடலுக்கு தேவையான நீர் அருந்தாத பட்சத்தில் சிறுநீர் பாதையில் வலி,வீக்கம்,கற்கள் உருவாகிவிடும்.எனவே தண்ணீர் அருந்துவதில் தனி அக்கறை செலுத்த வேண்டும்.அதேபோல் சிறுநீர் பாதையில் வலி,எரிச்சல் உணர்வு இருந்தால் வைட்டமின் சி சத்து நிறைந்த பழம்,காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீரக பாதையில் உள்ள தொற்று கிருமிகளை எளிதில் வெளியேற்றி விடலாம்.இதனால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.பிறப்புறுப்பை அடிக்கடி நீர் கொண்டு சுத்தம் செய்து வருவதன் மூலம் நோய் தொற்று பாதிப்பில் இருந்து எளிதில் தப்பித்து விட முடியும்.