சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதா? ஆபத்து.. தாமதிக்காமல் இந்த விஷயத்தை சீக்கிரம் பண்ணுங்க!!

Photo of author

By Divya

மனிதர்கள் கழிக்கும் சிறுநீரில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளக் கூடாது.சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்,துர்நாற்றம் வீசுதல் போன்றவை நோய் பாதிப்பிற்கான அறிகுறிகளாகும்.

சிறுநீரில் இரத்தம் வருவதற்கான காரணங்கள்:-

1)சிறுநீரக புற்றுநோய்
2)சிறுநீரக கல்
3)சிறுநீரக பாதை தொற்று
4)சிறுநீர் பாதை சேதம்

சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் அறிகுறிகள்:-

1)சிறுநீர்பை வீக்கம்
2)அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு
3)சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உண்டதால்

சிறுநீரில் இரத்தம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

*ஆவாரம் பூ பொடி – ஒரு தேக்கரண்டி
*ஆட்டு பால் – ஒரு கிளாஸ்
*செம்பருத்தி இதழ் – நான்கு

செய்முறை விளக்கம்:-

1)முதலில் ஆவாரம் பூவை சேகரித்து வெயிலில் காயவைத்து பவுடராக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

2)பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் ஆட்டுப்பால் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

3)அடுத்து இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி இளஞ்சூடு பக்குவத்திற்கு வந்ததும் ஒரு தேக்கரண்டி ஆவாரம் பூ பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

4)பிறகு நான்கு செம்பருத்தி இதழை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் போட்டு கலக்கி பருகுங்கள்.இந்த பாலை தினமும் ஒருவேளை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் இரத்தம் வெளியேறுவது கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

*கருப்பட்டி தூள் – இரண்டு தேக்கரண்டி
*கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
*ஏலக்காய் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

1)பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.

2)பிறகு உரலில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை மற்றும் ஒரு ஏலக்காய் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளுங்கள்.

3)இதை சூடாகி கொண்டிருக்கும் நீரில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.பிறகு இந்த பானத்தில் இரண்டு தேக்கரண்டி கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகுங்கள்.இதன் மூலம் சிறுநீரகத்தில் இரத்தம் வருவதை கட்டுப்படுத்தலாம்.