பேச்சுலர் பட கதாநாயகிக்கு இப்படி ஓர் பட்டமா? இணையத்தை கலக்கும் வீடியோ!
திவ்யபாரதி முதன் முதலில் மாடலிங் துறை மூலம் அறிமுகமானார். தற்பொழுது பிஸியாக இருக்கும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர்.பின்பு யூடியூபில் ஷார்ட் பிலிம் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். பேச்சுலர் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுக்கு கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.இவர் முதல் படத்திலேயே பெரும் வெற்றியை கண்டார். இவருக்கென்று பெரிய இளைஞர்கள் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இரண்டாவது படம் மதில் மேல் காதல். பிக் பாஸ் போட்டியாளர் முகன்ராவுடன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அஞ்சனா அலிகான் என்பவர் இயக்கியுள்ளார்.
பேச்சுலர் படத்தில் அடியே என்ற பாடல் இவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. அதில் இவரது கிளாமர் நடிப்பால் அதிகளவு ரசிகர்களை ஈர்த்தவர். தற்பொழுது வரை தனது சமூக வலைத்தள பக்கங்களை ஆக்டிவாகவே வைத்துள்ளார். கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இவர் பதிவிடும் கிளாமரான புகைப்படங்களுக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.தற்பொழுது பல பட வாய்ப்புகள் இவருக்கு குவிய தொடங்கியுள்ளது. தமிழ் திரை உலகில் இவரது கிளாமரால் பல கிசுகிசுக்கள் பேசப்பட்டு வருகிறது.தற்பொழுது சென்னையில் எடிசன் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
https://www.instagram.com/p/CbAoG-dDMeu/
அதில் இவருக்கு ரைசிங் ஸ்டார் என்ற விருது வழங்கப்பட்டது.இது பேச்சுலர் படத்திற்காக வழங்கப்பட்டது.வந்த ஓர் படத்திலேயே அதிகளவு ரசிகர்களையும் மக்களையும் கவர்ந்ததால் இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டது.விருதை பெற்றவுடன் ஸ்டேஜில் தனது நன்றியை மக்களுக்கு தெரிவித்தார்.தற்பொழுது அவர் விருது வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் விருது அளித்த எடிசன் குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.