உருவாக்கியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! – வானிலை ஆய்வு மையம்

0
195

உருவாக்கியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! – வானிலை ஆய்வு மையம்

இன்று முதல் நாளை மறுநாள் வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வருகிற சனிக்கிழமையன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஞாயிற்று கிழமையன்று (மார்ச் 20-ந் தேதி) உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு டிகிரி செல்சியஸ் முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவுகிறது.

இது கிழக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றலுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 19-ந் தேதி காலை நிலவக்கூடும்.

இன்றும், நாளையும் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Previous articleபேச்சுலர் பட கதாநாயகிக்கு இப்படி ஓர் பட்டமா? இணையத்தை கலக்கும் வீடியோ!
Next articleஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here