1 மது பாட்டிலுக்கு கூடுதலாக இவ்வளவு கட்டணமா? கணக்கில் வராத இந்த பணமெல்லாம் இவர்களுக்கு  தான் செல்கிறது!

0
136
Is there such an extra cost for a bottle of wine? All this unaccounted money goes to them!
Is there such an extra cost for a bottle of wine? All this unaccounted money goes to them!

1 மது பாட்டிலுக்கு கூடுதலாக இவ்வளவு கட்டணமா? கணக்கில் வராத இந்த பணமெல்லாம் இவர்களுக்கு  தான் செல்கிறது!

தேனிமாவட்டம் சுற்றுப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள்  செயல்பட்டு வருகிறது.கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அரசு நிர்ணயித்த விலையை விட ரூபாய் ஐந்து ,பத்து, இருபது என்று மதுபானத்திற்கு கூடுதலாகவும்   கட்டணம்  வசூலிக்கப்பட்டு வருகிறது.இதைப்பற்றி தகவலறிந்து சென்று நேரில் கள ஆய்வில் ஈடுபட்ட பொழுது வாடிக்கையாளர்களிடம்  கூடுதலாக வசூலிக்கும் பணம் விவரத்தை கேட்கும் பொழுது டாஸ்மார்க் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் டாஸ்மார்க் உயர்நிலை அதிகாரிகளிலிருந்து  அரசியல்வாதிகள் வரை நாங்கள் பணம் கொடுக்க வேண்டும், எங்களது கையில் இருந்தா எடுத்து தருவது என கூறுகின்றனர்.அதனால் தான்   இந்த ஐந்து ,ரூபாய் பத்து ரூபாய், இருபது ரூபாய் என கூடுதலாக பெற்றுக் கொண்டால்தான் நாங்கள் அவர்களிடம் தர முடியும் என்று கூறியுள்ளனர்.

இதனால் மதுப் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அரசு உயர்நிலை அதிகாரிகள் இருந்து அரசியல்வாதிகள் வரை இது போன்று வரும் பணத்தை வாங்கி தான் பிழைக்க வேண்டுமா என புலம்பி வருகின்றனர். இந்நிலை நீடிக்குமா அல்லது தடுக்கப்படுமா மாற்றம் ஏற்படுமா? மேலும் ஒரு குறிப்பிட்ட வகையான மதுபானங்களை தனக்கு வேண்டிய அனுமதியற்ற வியாபாரிகளிடம் கூடுதல் பணம் வசூலித்து மொத்த மொத்தமாக கொடுத்து விடுகின்றனர்.இப்படி பல்வேறுபட்ட வகைகளில் அரசுக்கு சென்றடையாத வருவாய் வருமானங்கள் தினம்தோறும் ஆயிரத்திலிருந்து லட்சம் வரை எங்கு செல்கிறது, என்னவாகிறது என மதுப் பிரியர்கள் வாடிக்கையாளர்கள் தொடர் கேள்விகளை முன்வைக்கின்றனர்.

Previous articleகுடியரசுத்தலைவர் பதவி கிடைக்காததால் விரக்தியான வெங்கையா நாயுடு! ஓரம் கட்டப் படுவதற்கான காரணம் இது தானாம்!
Next articleஉலகம் பேரழிவை சந்திக்க நேருமா?அமெரிக்க பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறிய அதிர்ச்சி தகவல்!