தளபதி 67 படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா? ரசிகர்கள் ஆர்வம்!

0
158

தளபதி 67 படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா? ரசிகர்கள் ஆர்வம்!

தளபதி 67 படத்திற்கு முதற்கட்ட பணிகளை லோகேஷ் தற்போது செய்து வருகிறார். படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் மாதங்களில் வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது குறித்து அப்படத்தின் அறிவிப்பு வரும் போது இயக்குநர் லோகேஷ் தானே அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்.இந்நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரம் திரைப்படத்தின் வெற்றி காரணமாக இயக்குநர் லோகேஷ் அவரின் தளபதி 67 திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தவுள்ளராம்.

இதன் காரணமாக அப்படத்தின் திரைகதையில் மேலும் சில நாட்கள் செலவிட இருப்பதாகவும், இதனால் அக்டோபர் மாதம் தொடங்கும் என சொல்லப்பட்டநிலையில் தற்போது தளபதி 67 டிசம்பர் மாதத்திற்கு தள்ளி போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விக்கிபீடியா பக்கத்தில் இந்த படத்திற்கு நான் வாழும் உலகம் என பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  இது  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.லோகேஷ் கனகராஜ் தனது படங்களுக்கு ஒற்றை வார்த்தையில் தான் இதுவரை டைட்டில் வைத்து வந்திருக்கிறார். அதனால் இந்த செய்தி உண்மைதானா என்கிற குழப்பமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.இருப்பினும் விக்கிபீடியா பக்கத்தை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்பதால், இந்த தகவல் உண்மையாக இருக்க வாய்ப்புகள் குறைவு தான் என்று பேசப்பட்டு வருகிறது.

Previous articleபாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்!
Next articleதள்ளிப் போகும் விஷாலின் ‘லத்தி’ திரைப்பட ரிலீஸ்… இதுதான் காரணமா?