இந்த மனசு தான்யா கடவுள்? நானிக்கு வாய்ப்பு கொடுத்த ராணா.

Photo of author

By Parthipan K

நானி நடிப்பில் உருவாகி வரும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் நடிக்க ராணா மறுத்ததாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் உருவாகியுள்ளது. முதலில் இந்தப் படத்தின் கதை நடிகர் ராணாவிடம் தான் கூறப்பட்டதாம். ஆனால் ராணா இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

ஸ்கிரிப்டை முடித்த உடன் இயக்குனர் ராகுல் சாங்கிருத்தியன் முதலில் ராணாவிடம் தான் கதையைக் கூறியுள்ளார்.

ஆனால், கதையைக் கேட்ட ராணா, அதை நிராகரித்ததோடு, நானிக்கு தான் இந்தப் படம் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ராணாவின் ஆலோசனையின் பேரில், ராகுல் நானியை அணுகினார். நானி உடனே படத்தில் நடிக்க சம்மதித்தார். ஷியாம் சிங்க ராய் படத்தில் நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இதில் கிருத்தி ஷெட்டி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

படத்தின் பெரும்பகுதி கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளில் படமாக்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

நானியின் சினிமா கேரியரில் இந்த படம்தான் தென்னிந்தியா முழுவதும் வெளியாக கூடிய படமாக அமைந்துள்ளது.