நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்ததா? வைரல் போட்டோவின் உண்மை பின்னணி!

0
201
Nayanathara
Nayanathara

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவை, ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என பட்டப்பெயர் கொடுத்து அழைக்கின்றனர்.ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா என இரு காதல் சர்ச்சைகளை சந்தித்த நயன்தாரா, தற்போது திருமணம் செய்து கொள்ளாமலேயே இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்தில் விக்னேஷ் சிவனுடன் நயனுக்கு பற்றிய காதல் இன்று வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலானதோடு, பலவித சந்தேகங்களையும் கிளப்பியது. விக்கி மீது சாய்ந்திருக்கும் நயன்தாரா, அவர் மார்பின் மீது வைத்திருக்கும் கையில் ஜொலி, ஜொலிக்கும் பிளாட்டினம் மோதிரத்தை அணிந்திருக்கிறார். அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக ‘விரலோடு உயிர்கூட கோர்த்து’ என விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தது, என்னது நயன் – விக்கிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்ததா? என ரசிகர்கள் அதிர்ச்சியடையும் லெவலுக்கு கொண்டு சென்றது.

ஏற்கனவே விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுவருவதாகவும், ஏன் ரகசிய திருமணமே முடிந்துவிட்டதாகவும் கூட அவ்வப்போது வதந்திகள் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த புகைப்படம் குறித்து நயன்தாரா – விக்கி நட்பு வட்டாரங்களில் விசாரித்த போது, நயன் அணிந்திருக்கும் அந்த மோதிரம் பழையது தான் என்றும், ரகசிய நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை என்றும் உறுதிபடுத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’, மலையாளத்தில் இரண்டு படங்கள் என நயன்தாரா பிசியாக இருப்பதால் இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த ஐடியாவும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Previous articleஒரு நிமிஷம் நில்லுங்க! குஷ்புவிடம் அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பிய சிறுமி! வைரல் வீடியோ
Next articleஅதிமுகவிற்கு டி.டி.வி. தினகரன் வைத்த ‘செக்’! வசமாக சிக்கிக் கொண்ட இபிஎஸ்- ஓபிஎஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here