நீங்கள் வாங்கும் தர்பூசணியில் இந்த அறிகுறியா.. ஆபத்து!! மக்களே எச்சரிக்கை!!
தற்பொழுது கோடை காலம் என்பதால் மக்கள் அதிக அளவு இளநீர் தர்பூசணி உள்ளிட்ட பழங்களையே தினசரி எடுத்துக் கொள்வர். அவர் விற்கப்படும் தர்பூசணியில் சேர்க்கை ரசாயனங்கள் கலக்கப்பட்டு விற்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
ஒவ்வொரு முறையும் தர்பூசணியை வாங்கும் பொழுது எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பது குறித்து பல ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டாலும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றம் அடைய தான் செய்கின்றனர். இந்த பதிவில் வருவதை பார்த்துவிட்டு இனி தர்ப்பூசணியை வாங்குங்கள்.
தர்பூசணியிலும் ஆண் பெண் என்று இருவகை உண்டு. பெண் வகையறை தர்பூசணியானது உருண்டையாக காணப்படும் இதுவே ஆண் வகையறை தர்ப்பூசணியானது சற்று நீளமாக காணப்படும்.
ஆண் வகையறை தர்ப்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக காணப்படும் இதுவே பெண் வகையறையில் தர்ப்பூசணியில் சுவை அதிகமாக இருக்கும். அதேபோல தர்ப்பூசணி சற்று பெரிதாக இருந்தால் சுவையாக இருக்கும் என்று நினைப்பது மிகவும் தவறு தர்பூசணியின் வடிவத்திற்கும் அதன் சுவைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
தர்ப்பூசணி எடுத்தாலும் அது சற்று எடை கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அதில் நீர் சத்து அதிகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.அதேபோல தர்ப்பூசணியின் வெளிப்புற நிறத்தை வைத்தும் நாம் வாங்கிக் கொள்ளலாம்.
மிகவும் பச்சையாக காணப்படும் தர்பூசணியை வாங்கக்கூடாது இளம் நிறத்தில் இருக்கும் தர்பூசணியை வாங்கலாம். ஏதாவது வைரஸ் காரணமாக தர்பூசணி பாதிக்கப்பட்டிருந்தால் அதன் மேற்பகுதியில் சிறு சிறு வட்ட வடிவிலாக செதுக்கப்பட்டது போல் காணப்படும்.
அதனை வாங்குவதை முற்றிலும் தவிர்க்கலாம். தர்பூசணியின் காம்பானது நன்றாக காய்ந்து காணப்பட்டால் மிகவும் பழுத்து சுவையுடன் காணப்படும்.