நடிகர் நாசருக்கு மகள், மனைவி, தங்கையாக நடித்த நடிகை இவங்களா?

0
128
#image_title

நடிகர் நாசருக்கு மகள், மனைவி, தங்கையாக நடித்த நடிகை இவங்களா?

இயக்குநரும், நடிகருமான நாசர் 1985 ஆம் ஆண்டு “கல்யாண அகதிகள்” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் அவர்கள் தான், நாசர் அவர்களை சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் அவரே.

அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்த நடிகர்கள் நாசர் சிறந்த நடிகர் என்று பெயரை பெற்று தந்தது. தேவதை உள்ளிடட இரண்டு படங்களை நாசர் அவர்கள் இயக்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நடிகர் ஸ்ரீவித்யா அவர்கள் மாமியாராக; மனைவியாக; தாயாக உள்ளிட்ட பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்தது அதுபோல நடிகர் நாசர் அவர்களுக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் மகளாக; தங்கையாக; மனைவியாக நடித்துள்ளார்.

பாகுபலி படத்தில் நாசர் அவர்களுக்கு ரம்யா கிருஷ்ணன் அவர்கள் மனைவியாக நடித்துள்ளார். பிறரு 2019 ஆம் ஆண்டு வெளியான “வந்தா ராஜாவா தான் வருவேன்” என்ற படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நாசர் அவர்களுக்கு மகளாக நடித்துள்ளார். இதற்கெல்லாம் முன்னோடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த படையப்பா படத்தில் நடிகர் நாசர் அவர்களுக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தங்கையாக நடித்துள்ளார். எனவே நடிகர் நாசர் அவர்களுக்கு, தங்கையாக மனைவியாக மகளாக என மூன்று வெவ்வேறு உறவின் உரை கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது நடிகை ரம்யா கிருஷ்ணா அவர்கள் தான். நடிகர் நாசர் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Previous articleமகளிர் உரிமைத் தொகை திட்டம்.. மேல்முறையீடு செய்ய போறீங்களா? அப்போ இதை கவனத்தில் கொள்ளுங்கள்!
Next articleஆன்லைன் மூலமாக லட்சக் கணக்கில் மோசிடி!!! பிரபல நடிகையிடம் கைவரிசை காட்டிய மோசடி கும்பல்!!!