லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் படம் இதுதானா! ரசிகர்கள் ஆர்வம்!
திரை உலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனர்களில் முதன்மையானவராக வளம் வருகிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயற்றிய கைதி,விக்ரம், மாஸ்டர் போன்ற படங்கள் அதிக வசூலை பெற்று தந்தது. இப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு தான் வருகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான நான்காவது திரைப்படம் விக்ரம் இதுவே இவ்வளவு பெரிய சாதனை படைத்துள்ளது என்பது ஹாலிவுட் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனை தொடர்ந்து 66 எனும் அடைமொழி கொண்ட படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் ரத்தினகுமார் இவர் லோகேஷ் உடன் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய 66 என்னும் படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய்யின் 67 திரைப்படமாக உருவாக உள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் பிறந்தநாளையொட்டி தளபதி 67 படத்தின் அறிவிப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் விஜய்யின் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியானது. தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு காத்திருக்கின்றார்கள்.