தமிழக கூட்டுறவு சங்கங்களில் ஊதிய உயர்வு !பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

0
94

தமிழக கூட்டுறவு சங்கங்களில் ஊதிய உயர்வு!பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்றைய தேதியிலிருந்து சம்பள உயர்வு குறித்த கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதை தொடர்ந்து தமிழக அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக  அரசு அவர்களுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் சம்பளம் உயர்வினை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் ஊதிய உயர்வு வழங்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது.

அந்தந்த சங்கங்களின் வகைப்பாட்டிற்கேற்ப 23% சதவீதம் வரை ஊதியம்  அவர்களுக்கு அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பளம் உயர்வினால் பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,259 முதல் அதிகபட்சமாக ரூ.14,815 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். மேலும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் 1,675 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பணிபுரிவும் பணியாளர்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டார்கள்.

author avatar
Parthipan K