தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

0
201

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

ஒரு மனிதனுக்கு பெயர் தான் அவனுக்கு அடையாளமாக திகழ்ந்து வரும் நிலையில் திரையில் நாம் பார்த்து ரசித்து கொண்டாடி வரும் விஜய்,ரஜினி,சூர்யா உள்ளிட்ட பல ஹீரோக்களின் நிஜப் பெயர் வேறு என்பது பலருக்கும் தெரியாது.இவ்வாறு படத்திற்காக,புகழிற்காக என்று பல காரணங்களுக்காக தங்கள் பெயரை மாற்றி வைத்து கொண்ட நடிகர்களின் விவரம் இதோ.

1.விஜய் (ஜோசப் விஜய் சந்திரசேகர்)

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய விஜய் ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவானார்.பல தடைகளை தாண்டி விடா முயற்சியின் மூலம் இன்று தமிழ் திரையில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

திரையுலகில் நுழையும் போதே விஜய் என்று அறிமுகமான இவரின் நிஜ பெயர் “ஜோசப் விஜய் சந்திரசேகர்” ஆகும்.

2.ரஜினிகாந்த் (சிவாஜி ராவ் கெய்வாட்)

கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்து பின்னாளில் பல வெற்றி படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டி தூக்கினார்.

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

இதுவரை 169 படங்களில் நடித்துள்ள இவர் இந்திய சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகர் ஆவார்.இவரின் நிஜ பெயரான “சிவாஜி ராவ் கெய்க்வாட்” என்பதை ‘ரஜினிகாந்த்’ என்று மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் பாலச்சந்தர் மாற்றி வைத்தார்.

3.சூர்யா (சரவணன்)

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார்.

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

நடிகர்,தயாரிப்பாளர்,தொழிலதிபர் என பன்முகம் கொண்ட நடிகராக உள்ள இவரின் நிஜ பெயர் “சரவணன்”.தமிழ் திரையுலகில் சரவணன் என்று பல நபர்கள் இருந்த காரணத்தால் தன் பெயரை ‘சூர்யா’ என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

4.விஜயகாந்த் (விஜயராஜ்)

தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தமிழில் நல்ல கருத்துள்ள பல படங்களில் நடித்து இருக்கிறார்.கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான ‘அகல் விளக்கு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் 150 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள விஜயகாந்த் அவர்களின் நிஜ பெயர் “விஜயராஜ்” என்பது பலருக்கும் தெரியாது.தமிழ் திரைப்படத்துறையில் நுழைந்த இவர் தன் பெயரை விஜயகாந்த் என்று மாற்றி கொண்டார்.

5.தனுஷ் (வெங்கடேஷ் பிரபு)

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

தமிழ்,ஹிந்தி,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள இவர் இதுவரை 50 படங்களில் நடித்திருக்கிறார்.தனது நடிப்பிற்காக பல விருதுகளை வாரி குவித்துள்ள தனுஷ் அவர்களின் நிஜ பெயர் வெங்கடேஷ் பிரபு ஆகும்.திரையில் நுழைவதற்காக தன் பெயரை தனுஷ் என்று மாற்றி கொண்டார்.

Previous articleகோபத்தில் கண்ணதாசன் இருந்த அறையை பூட்டிய எம்.ஜி.ஆர். : நடந்தது என்ன?
Next articleதயவு செய்து என் தந்தையை ஜெயிலில் அடையுங்க!!! போலீசில் புகார் அளித்த 13 வயது சிறுவன்!!!