தன் ரத்தத்தையே எடுத்து பேசியல் செய்யும் சின்னத்திரை நடிகை இவர் தானா!!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜூலி. நர்ஸ் தொழில் செய்து வந்த ஜூலி அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கு ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த புகழை கெடுத்து கொண்டார். ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இழந்த புகழை மீண்டும் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே பிரபலத்தோடு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொள்ள மோசமான பெயரை பெற்றார். அதன்பிறகு தனது பெயரை மாற்ற ஜுலி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நல்ல பெயரை பெற்றார். இதனைத் தொடர்ந்து தன் உடல் அழகையும் முடி அழகையும் தற்போது முக அழகையும் மாற்றி வருகின்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது ஹேர் ஸ்டைலை புதிதாக மாற்றி அதற்கு போஸ் ஒன்றை கொடுத்தார். அதைப் பார்த்த சில இணையதளத்தில் கேவலமாக திட்டியுள்ளார்கள். இன்னும் சில பேர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது முகம் ஜொலிப்பதற்காக ஜூலி செய்த காரியம்.
நிறைய போட்டோ ஷுட்கள் தொடர்ந்து செய்துவரும் ஜுலி முக அழகிற்காக ஸ்கின் கிளினிக் வாம்பயர் ஃபேஷியல் எனப்படும் ரத்தம் மூலம் முகத்தை அழகுப்படுத்தும் சிகிச்சையை ஜுலி எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஜூலியின் ஃபேஸ் கண்ணாடி போல் பளபளப்பானது. மேலும் இன்னும் நிறைய போட்டோ ஷுட்களுக்கு வழி விடுவார் என தெரிகிறது. இதை காண அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.