செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!

0
235

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!

 

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நாட்டின் 75 நகரங்கள் சுற்றி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாளை நடைபெற இருக்கிற போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கறுப்பு நிறம் கொண்ட காயை தேர்வு செய்தார். வெள்ளை மற்றும் கறுப்பு நிறம் கொண்ட காய் எடுத்து வரப்பட்டது.அப்போது கறுப்பு நிற காயைப் பிரதமர் மோடி தேர்வு செய்தார். நாளை முதல் இவ்விழா வெகு மேசையாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

 

Previous articleதன் ரத்தத்தையே எடுத்து பேசியல் செய்யும் சின்னத்திரை நடிகை இவர் தானா!!
Next articleமுன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான காரணம் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here