சூதாட்ட விளம்பரங்களும் நடித்ததற்காக டோலிவூட்டை சேர்ந்த விஜய் தேவர் கொண்ட நிதி அகர்வால் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 25 பிரபலங்கள் மீது சைபராபாத்தில் உள்ள மியாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
மியாபூர் காவல் துறை வெளியிட்ட தகவலின்படி, முதலில் இந்த சூதாட்ட வழக்கின் கீழ் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி போன்ற பல பிரபலங்கள் கைது போன்ற பல பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நிதி அகர்வால், பிரணிதா மற்றும் அனன்யா நாகல்லா என மொத்தமாக தற்பொழுது 25 பிரபலங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களின் மீது, ஹைதராபாத் மற்றும் சைதராபாத் போலீசார் பந்தய ஆப்புகளை ஊக்குவித்ததற்காக முதல்முறையாக நடிகர்களின் மீது வழக்கு பதிவு செய்த எஃப் ஐ ஆர் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 318 (4), 112 r/w 49, தெலுங்கானா கேமிங் சட்டத்தின் 3, 3(A), மற்றும் 4 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008 இன் பிரிவு 66D போன்ற சட்டங்களின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மியாப்பூர் காவல் துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இது போன்ற குற்றங்களுக்காக நடிகர்கள் மீது எஃப் ஐ ஆர் போடப்படுவது இதுதான் முதல் முறை என்றும் ஏற்கனவே இது குறித்த நோட்டீசுகளை அவர்களுக்கு அனுப்பி விட்டதாகவும் ஹைதராபாத் மற்றும் சைதரபாத் காவல் துறையினர் விளக்கமளித்திருக்கின்றனர்.