விவேக் இறந்தது இதற்காகவா? அவர் சொன்ன சொல் இன்று நிறைவேறியது!

Photo of author

By Rupa

விவேக் இறந்தது இதற்காகவா? அவர் சொன்ன சொல் இன்று நிறைவேறியது!

Rupa

Is this why Vivek died? His word came true today!

விவேக் இறந்தது இதற்காகவா? அவர் சொன்ன சொல் இன்று நிறைவேறியது!

கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் வேளையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பல நடவேடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. முன்பை காட்டிலும் இந்த கொரோனாவின் 2வது அலையானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தினார்.

அதன்பின் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.அதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்து  தீவிர சிகிச்சை அளித்தனர்.அவரது இதயக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.அதன்பின் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை தொடர்ந்து கொண்டே இருந்த நேரத்தில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரையுலகினர் அனைவரும் சின்ன கலைவாணர்,சமூக சேவகர் எனவும்  அவரது மறைவு எங்களுக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது என கூறி இரங்கல்கள் தெரிவித்தனர்.பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.அந்தவகையில் வெளி மாவட்டங்களில் மக்கள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு விவேக் ஆத்மா ஷாந்தி அடைய வேண்டுமென்று பிரார்த்தித்தனர்.அவர் அன்று காட்டிய வழி அவர் இறப்பிற்கு பிறகு,இன்று சாத்தியமாக அமைந்தது.

அவர் இறந்தும் அவர் நினைத்ததை செய்து காட்டிவிட்டார் என பலர் கூறுகின்றனர்.எந்த ஒரு திரையுலகினர் மறைவுக்கும் பொது மக்கள் இப்படி மரக்கன்று நட்டு நல்ல காரியம் செய்யவில்லை.இவ்வாறு இவரின் மறைவுக்கு செய்வது இதுவே முதல் முறையாகும்.இறந்தபின்னும் அவரது விதையை விதைத்து சென்றுள்ளார்.