மனிதர்கள் அனைவருக்கும் கண்,காது,மூக்கு என்று உடல் உறுப்புகள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தாலும் இரத்த வகை மாறுபட்டு காணப்படுகிறது.பிளட் குரூப்பில் O பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்,A பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்,B பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்,AB பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என்று எட்டு வகை இருக்கிறது.இதில் நெகட்டிவ் பிளட் குரூப் குறைவான நபர்களுக்கு மட்டுமே இருக்கிறது.நமது பிளட் குரூப் வகையை பொறுத்து நம் உணவுமுறையை பின்பற்றி வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிளட் குரூப்பிற்கு ஏற்ற உணவுகள்:
O வகை பிளட் குரூப்:
புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இறைச்சி,பச்சை காய்கறி மற்றும் கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இந்த இரத்த பிரிவு உள்ளவர்கள் வேர்க்கடலை,பீன்ஸ்,பட்டாணி,பருப்பு போன்ற உணவுப் பொருட்களை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் செரிமானப் பிரச்சனை ஏற்பட்டுவிடும்.
A வகை பிளட் குரூப்:
இந்த இரத்த பிரிவை சேர்ந்தவர்கள் சைவ உணவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களை உட்கொள்ள வேண்டும்.அத்தி,அவகோடா,ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிட வேண்டும்.
இந்தஇரத்த வகை உள்ளவர்கள் அசைவ உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.பால்,மொச்சக் கொட்டை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
B வகை பிளட் குரூப்:
இந்த வகை பிளட் குரூப் இருப்பவர்கள் அசைவ உணவுகளை தாராளமாக சாப்பிடலாம்.பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
ஆனால் அசைவ உணவுகளில் சிக்கனை மட்டும் தவிர்ப்பது நல்லது.அதேபோல் சோளம்,பருப்பு வகைகள் மற்றும் உலர் விதைகளை தவிர்ப்பது நல்லது.
AB வகை பிளட் குரூப்:
பீன்ஸ்,வான்கோழி,கடல் மீன்,பருப்பு வகைகள்,பால் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.பழங்களில் ஆப்பிள்,அத்தி,தர்பூசணி,வாழைப்பழங்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ஆனால் இந்த இரத்த வகை உள்ளவர்கள் மாட்டிறைச்சி,சோளம்,காஃபின் மற்றும் சிக்கன் போன்ற உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.தங்கள் பிளட் குரூப்பிற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.