பைக்கை தொட்டது ஒரு குத்தமா?துடைப்பம்-கம்பியை கொண்டு பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்!!.
உத்தர பிரதேசம் மாநிலம் ராணாப்பூர் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது.இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இதில் பலர் பேர் பட்டியலின மாணவர்கள் தான் அதிகமாக படித்து வருகிறார்கள்.
அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தான் கிருஷ்ண மோகன் சர்மா.இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கிருஷ்ண மோகன் சர்மா வண்டியை தொட்டுள்ளார்.அதனை கண்ட ஆசிரியர் ஓடி வந்து அந்த மாணவனை அடித்து இழுத்து சென்று ஒரு அறையில் அடித்துள்ளார்.
மேலும் அந்த அறையில் இருந்த துடைப்பம் மற்றும் இரும்பு கம்பி என அருகில் உள்ள பொருட்களை கொண்டு அந்த மாணவனை தாக்கிவுள்ளார்.வலி தாங்காமல் அலறிக் கொண்டிருந்த சிறுவனின் குரல் கேட்ட சக ஆசிரியர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.மேலும் கொடூரமாக மாணவனை தாக்கிய ஆசிரியரை பள்ளி கல்வி துறையினர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.