போக்குவரத்து இனிமேல் தனியார் மயமா?? அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! 

0
108
Is transport private anymore?? Minister's action announcement!!
Is transport private anymore?? Minister's action announcement!!

போக்குவரத்து இனிமேல் தனியார் மயமா?? அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! 

போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படுமா? என்ற கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில் கூறியுள்ளார்.

அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 4,200 புதிய பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாக அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை அண்ணாசாலையில் உள்ள பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிரந்தர பணியாளர்களை பணிக்கு தேர்ந்தெடுத்த பின்னர் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு புதிய ஓட்டுநர், நடத்துநர்களை சேர்ப்பதற்கு முதல்-அமைச்சர்  ஸ்டாலின் அனுமதியோடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும்  இதற்கான தேர்வு மற்றும் நேர்காணல் உரிய முறையில் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணியில் நிரந்தர பணியாளர்களாக அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்ததாக அரசு போக்குவரத்து கழகத்திற்கு 4,200 புதிய பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாக தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துறையை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.  இதனால் போக்குவரத்து துறை தனியார் மையமாக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்தார். 

 

Previous articleஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது… என்ன அதற்கு இது தான் காரணமா..?
Next articleஅமைச்சர் முத்துசாமி திடீர் பல்டி!! டெட்ரா பாக்கெட் எதிர்ப்பா குடிமகன்கள் ஷாக்!!