அமைச்சர் முத்துசாமி திடீர் பல்டி!! டெட்ரா பாக்கெட் எதிர்ப்பா குடிமகன்கள் ஷாக்!! 

0
37

அமைச்சர் முத்துசாமி திடீர் பல்டி!! டெட்ரா பாக்கெட் எதிர்ப்பா குடிமகன்கள் ஷாக்!!

அமைச்சர் முத்துசாமி சில தினங்களுக்கு முன்பு டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்யப்படும் எனவும் மது கடைகள் காலை நேரத்திலேயே திறக்கப்படும் எனவும் குடிமகன்கள் குடிப்பதற்காக வேறு வழியை தேர்வு செய்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் ஆலோசித்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார்.

அமைச்சர் முத்துச்சாமியின் இந்த பேட்டியால் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை காலையிலேயே மாற்றினால் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அரசியல் கட்சியினர் கண்டனத்தை பதிவு செய்தனர். சமீபத்தில் குடிமகன்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது மது விற்பனை ஏன் குறைந்து வருகிறது என அவர்களிடம் கேள்வி கேட்டபோது 180 மில்லி லிட்டர் மதுவை பிரித்துக் குடிப்பதற்காக நேரம் அதிகமாக செலவிடப்படுவதாக கவலை தெரிவித்தனர். எனவேதான் மது குடிப்போரின் வசதிக்காக 90 மில்லி லிட்டர் பாக்கெட்டில் மது விற்பனை செய்ய திட்டத்தை தீட்டினர். இந்த அறிவிப்புக்கு அரசியல் வட்டாரத்தில் இருந்தும் பல அமைப்புகள் மூலமாகவும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துச்சாமி, டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை மாற்றும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்று கூறினார். அதே போல 90 மில்லி டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்றும் கூறி திடீரென பல்டியடித்துள்ளார். தான் அறிவித்த அறிவிப்பை அவரே இல்லை என பல்டி அடித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.