யு.ஜி.சி மாநிலங்களின் உரிமையை பறிக்கின்றதா!!யுஜிசி வரைவு!!

யுஜிசி என்பது இந்தியாவில் பல்கலைக்கழக கல்வி அமைப்பை மேம்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பாக செயல்படுவதற்கும், பல்கலைக்கழகங்களை மேற்பார்வை இடுவதற்கும், பல்கலைக்கழக தரக்கட்டுப்பாடு குறித்து முடிவு எடுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய பல்கலைக்கழகங்களுக்கு தகுதி அதிகரிக்க செய்தல், மாநில பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் ஆகியவை இவை இதன் முதல் பணியாகும்.

இந்நிலையில், சமீபத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கே அதிகாரம் உண்டு என்ற வகையில் வரைவு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது யுஜிசி. இது தற்சமயம் பெரும் சர்ச்சையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனை அடுத்து திமுக சார்பில் டெல்லியில் நேற்று போராட்டம் நடைபெற்று இருந்தது. இதில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவரணியும், பல கட்சித் தலைவர்களும் இணைந்து யுஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாடளவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

இவர்கள் இணைந்து இந்திய அரசின் இந்த வரைவு நிதியை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம் நடந்திருந்தது. மாநிலங்களின் உரிமையை முற்றிலுமாக மத்திய அரசு கண்ட்ரோல் செய்ய திட்டமிட்டுள்ளது என்ற ஒரு நோக்கில் இதன் வரைவு நிதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும், யுஜிசிக்கு துணைவேந்தர் நியமனத்தில் தலையிடுவதற்கான உரிமை இல்லை எனவும் பலதரப்பில் கூறப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த பிரச்சினை குறித்த முடிவை 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.