உங்களில் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும்.அதேபோல் சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருக்கும்.இது சிறுநீரகப் பாதை தொற்று,தண்ணீர் அருந்தாமை போன்ற காரணங்களாலும் வெப்ப அதிகரிப்பால் உண்டாகும் உடல் சூட்டாலும் ஏற்படுகிறது.
சொட்டு சொட்டாக சிறுநீர் வர காரணம்:
**நீர்ச்சத்து குறைபாடு
**உடலில் வெப்பம் அதிகரித்தல்
**சிறுநீர் பாதை தொற்று
**சிறுநீர்ப்பை வீக்கம்
**மருந்து பக்கவிளைவு
சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவதால் ஏற்படும் பாதிப்புகள்:
**சிறுநீர் கழிக்கும் பொழுது வலி
**சிறுநீர் வெளியேற்றும் போது எரிச்சல்
**சூடான சிறுநீர் வெளியேறுதல்
**சிறுநீரை வெளியேற்றுவதில் சிரமம்
தேவையான பொருட்கள்:-
1)சின்ன வெங்காயம் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு இதை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்ததாக ஒரு பாத்திரம் எடுத்து இடித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
ஸ்டெப் 03:
பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.இந்த வெங்காய பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும்.சிறுநீர் கடுப்பு,சிறுநீரக எரிச்சல் முழுமையாக குணமாகும்.
மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
3)சின்ன வெங்காயம் – இரண்டு
4)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் கல்வத்தில் ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி வர கொத்தமல்லி விதையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அரைத்து வைத்துள்ள சீரக கலவையை அதில் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
ஸ்டெப் 04:
ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அடுப்பை ஆப் செய்துவிட்டு பானத்தை அரை மணி நேரம் மூடிவைக்க வேண்டும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் நீர் கடுப்பு,சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.அதேபோல் உளுந்து ஊறவைத்த தண்ணீரை பருகி வந்தால் சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும் பாதிப்பு குணமாகும்.