அரசியலில் களமிறங்கும் நடிகர் விஷால்! அவருக்கு ஆதரவாக முக்கிய அரசியல் பிரபலம்

Photo of author

By Parthipan K

அரசியலில் களமிறங்கும் நடிகர் விஷால்! அவருக்கு ஆதரவாக முக்கிய அரசியல் பிரபலம்

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் நடித்த சண்டைக்கோழி ,மருது மற்றும் துப்பறிவாளன் போன்ற படங்கள் ஹிட் கொடுத்தது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் விஷால் நடித்த சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் நஷ்டம் எதுவும் இன்றி சாதாரண வசூலை பெற்று வருகின்றது. இதனையடுத்து விஷால் தற்போது மத கஜ ராஜா, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 , நாளை நமதே, லத்தி ,கருப்பு ராஜா வெள்ளை ராஜா, போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவை விரைவில் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சுந்தர் சி ,ஆதிக் ரவிச்சந்திரன் ,மிஸ்கின் பிரபுதேவா, வெங்கடேஷ் போன்ற இயக்குனர்களுடன் இணைந்து படம் நடித்து வருகிறார்.

இவருக்கு சில வருடங்களுக்கு முன் அனுஷா என்பவரை  நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணம் நடக்கவில்லை. தற்போது விஷால் சினிமாவை தாண்டி ஒரு விஷயம் செய்த வருகிறார் எனவும் பேசப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விஷாலை சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு கட்சி சார்பாக போட்டியிட வைப்பதாக உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஆனது எந்த அளவிற்கு உண்மை என கூற முடியவில்லை.