கரும்பு சக்கையில் இருந்து தயாரிக்கப்டும் இனிப்பு பொருளான சர்க்கரை பலவகை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.இந்த வெள்ளை சர்க்கரையை தயாரிக்க சிலவகை இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்த சர்க்கரையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த வெள்ளை சர்க்கரையை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.காலையில் எழுந்ததும் நாம் முதலில் பருகும் பானமான தேநீர்,காபியில் இந்த சர்க்கரை சேர்த்து ருசிக்கின்றோம்.
இந்த சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரை நீரிழிவு நோய் பாதிப்பை அதிகரித்துவிடும்.சர்க்கரையில் நிறைந்துள்ள அதிகப்படியான கலோரி உடல் எடையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகரிக்க வெள்ளை சர்க்கரையும் காரணமாக இருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்தி வந்தால் உடலில் உள்ள திசுக்கள் சேதமடைந்துவிடும்.வெள்ளை சர்க்கரையை அதிகளவு எடுத்துக் கொண்டால் பற்சிதைவு ஏற்படும்.குடற்புழுக்கள் உருவாக வெள்ளை சர்க்கரை முக்கிய காரணமாக உள்ளது.
தொடர்ந்து வெள்ளை சர்க்கரை பயன்படுத்தி வந்தால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.சிலர் வெள்ளை சர்க்கரைக்கு மாற்று தேன்,வெல்லம்,நாட்டு சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
சர்க்கரையைவிட மற்ற பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நினைத்து அதனை அதிகளவு பயன்படுத்துகின்றனர்.ஆனால் உண்மையில் சர்க்கரை,வெல்லம்,தேன்,நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு என்று அனைத்திலும் அதிக சர்க்கரை நிறைந்திருக்கிறது.இதில் எதை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் இரத்த சர்க்கரை அதிகரித்துவிடும்.
100 கிராம் சுத்திகரிக்கபட்ட சர்க்கரையில் 400 கலோரிகள் இருக்கிறது.அதேபோல் 100 கிராம் பிரௌன் சுகரில் 375 கலோரிகள் இருக்கிறது.100 கிராம் தேனில் 340 கலோரிகள் நிறைந்திருக்கிறது.அதேபோல் 100 கிராம் வெல்லத்தில் 380 கலோரிகள் நிறைந்திருக்கிறது.
இந்த இனிப்புகள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றாலும் இதில் இருப்பதில் ஓரளவிற்கு நன்மை கொண்ட இனிப்பு என்றால் அது தேன் தான்.மற்ற இனிப்பு பொருட்களைவிட தேனின் கிளைசெமிக் குறையீடு 55 என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.டயட் இருப்பவர்கள்,நீரிழிவு நோயாளிகள் இந்த நான்கு வகை இனிப்பையுமே தவிர்த்துக் கொள்வது நல்லது.