நெருப்பு போல் உடல் சுடுதா? அப்போ இந்த ரசம் வைத்து சாப்பிட்டு சூட்டை குறைக்கலாம்!!

Photo of author

By Divya

நெருப்பு போல் உடல் சுடுதா? அப்போ இந்த ரசம் வைத்து சாப்பிட்டு சூட்டை குறைக்கலாம்!!

Divya

கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.உடல் உஷ்ணத்தை குறைக்க சீரகம்,வெந்தயம் போன்றவற்றை பயன்படுத்தி ரசம் தாயரித்து சாப்பிடலாம்.

உடல் சூட்டை குறைக்கும் மூலிகை ரசம்:

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)கருப்பு மிளகு – 10
4)புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
5)தக்காளி – ஒன்று
6)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
7)வர மிளகாய் – ஒன்று
8)கொத்தமல்லி தழை – சிறிதளவு
9)கடுகு – கால் தேக்கரண்டி
10)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
11)பூண்டு பல் – நான்கு
12)உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு புளியை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பூண்டு,மிளகு,மிளகாய்,வெந்தயம் ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து கடுகு போட்டு பொரியவிட வேண்டும்.

அதன் பிறகு கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.பிறகு தக்காளி பழம் ஒன்றை பொடியாக நறுக்கி அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு இடித்த கலவையை போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.பிறகு ஊறவைத்த புளிக்கரைசலை அதில் ஊற்ற வேண்டும்.அடுத்து உப்பு,மஞ்சள் தூள் போட்டு குறைவான தீயில் ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பிறகு இந்த ரசத்தில் பெருங்காயத் தூள் சேர்க்க வேண்டும்.அதன் பிறகு கொத்தமல்லி தழையை தூவ வேண்டும்.இதை இளஞ்சூட்டில் பருகி வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.