உங்கள் குழந்தை திக்கி திக்கி பேசுறாங்களா? இதில் இருந்து மீண்டு சரளமாக பேச வைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

இன்று உலகளவில் நாற்பத்து ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் திக்கு வாய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.குழந்தையில் ஏற்படும் இந்த பிரச்சனையை சரிப்படுத்த தவறினால் பின்னாளில் பெரிய பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும்.

துக்கு வாய் பாதிப்பு இருபவர்களால் நினைத்ததை உடனடியாக பேச முடியாது.பேசுவதில் சிரமம் சந்திப்பதால் சில நேரம் பேசாமல் மௌனம் காக்கின்றனர்.குழந்தைகளுக்கு நரம்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் பொழுது திக்குவாய் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

திக்கு வாய் ஏற்பட காரணங்கள்:

பிறவி பிரச்சனை
ஊட்டச்சத்து குறைபாடு
உடலில் நரம்பியல் பிரச்சனை
கை பழக்கம்

திக்கு வாய் பாதிப்பு:

!)பேச்சில் தெளிவின்மை
2)பேச்சு குளறல்
3)தன்னம்பிக்கை குறைதல்

திக்கு வாய் சரியாக அண்ட தைலம்:

தேவையான பொருட்கள்:

முட்டை – 20
தண்ணீர் – தேவையான அளவு
பீங்கான் பாட்டில் – ஒன்று

செய்முறை விளக்கம்:

பாத்திரம் ஒன்றை எடுத்து 20 முட்டையை போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

முட்டை நன்றாக வெந்து வெந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு முட்டை ஓட்டை நீக்கிவிட வேண்டும்.

அதன் பிறகு முட்டையின் வெள்ளை கருவை நீக்கிவிட்டு மஞ்சள் கருவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.

அதன் பிறகு வேக வைத்த முட்டை கருவை அதில் போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து வறுத்தால் முட்டையில் இருந்து இயற்கையாக எண்ணெய் பிரிந்து வரும்.

அந்த அளவிற்கு நாம் பக்குவமாக வறுக்க வேண்டும்.இந்த எண்ணெயை தான் அண்ட தைலம் என்று சொல்வார்கள்.இதை ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி சேமித்துக் கொள்ளுங்கள்.இந்த அண்ட தைலத்தை நாவில் வைத்து தேய்த்தால் திக்குவாய் பாதிப்பு சீக்கிரம் சரியாகும்.

திக்கு வாய்க்கு மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:

வசம்பு துண்டு – ஒன்று

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு துண்டு வசம்பை தண்ணீரில் நினைத்து தரையில் உரசிக் கொள்ள வேண்டும்.இந்த வசம்பு பேஸ்டை நாவில் வைத்து தேய்த்து வந்தால் திக்கு வாய் பிரச்சனை சரியாகும்.

குழந்தைகளின் திக்கு வாய் பிரச்சனையை சரி செய்ய அவர்களிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும்.அவர்களை சத்தமாக பேச வைக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் திக்கு வாய் சரியாகும்.