அனைவருக்கும் குழந்தை பருவம் என்பது சுறுசுறுப்பான ஆடி ஓடி விளையாடக் கூடிய பருவமாக இருக்கிறது.ஆனால் இக்காலத்தில் பிள்ளைகள் ஓடி ஆடி விளையாடுவதை காண்பது அரிதான விஷயமாக இருக்கிறது.
குழந்தைகள் சோம்பேறிகளாக மாற காரணம் என்ன என்பது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்.குழந்தைகள் சோம்பேறிகளாக மாற காரணமே பெற்றோர் தான்.பெற்றோரின் சில பழக்க வழக்கங்கள் குழந்தைகளை சோம்பேறிகளாக உருவெடுக்க வைக்கிறது.
இன்று ஒவ்வொரு குழந்தைக்கும் தனி ஸ்மார்ட் போனை பெற்றோர் கொடுத்துவிடுகின்றனர்.ஸ்மார்ட் போனிற்கு அடிமையாகும் குழந்தைகள் மற்ற விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை.குழந்தைகளுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போனால் அவர்களுக்கு சுறுசுறுப்பு என்பது தானாக குறைந்துவிடும்.
ஆரோக்கியம் இல்லாத உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.குழந்தைகளுக்கு சிறுதானியம்,பருப்பு வகைகளை உட்கொள்ள கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அதிக கட்டுப்பாடு விதிப்பை தவிர்க்க வேண்டும்.இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் எப்பொழுதும் சோர்வாக தெரிவார்கள்.
குழந்தைகளிடையே எல்லா விஷயங்களிலும் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.குழந்தைகளுக்கு எந்த பணியிலும் ஆர்வம் இல்லாமல் போனால் அவர்கள் சோம்பேறிகளாகி விடுவார்கள்.குழந்தைகளுடன் உரையாட வேண்டும்.அவர்களை கல்வியில் மட்டுமின்றி இதர நல்ல ஆக்டிவிட்டிகளிலும் ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மொபைல் தருவதை தவிர்க்க வேண்டும்.குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்களை செய்து கொடுக்க வேண்டும்.மற்ற குழந்தைகளுடன் விளையாட வைக்க வேண்டும்.பூங்கா போன்ற இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும்.