உங்கள் வீட்டில் எலி தொல்லையா? இந்த ஒரு இலை போதும்!
எலியை எவ்வாறு இயற்கை முறையில் வீட்டை விட்டு விரட்டி அடிக்கலாம். இந்த ஒரு முறைகளை பயன்படுத்தினால் மட்டும் போதுமானது.
நொச்சி இலை இது சாலை ஓரங்களில் பரவலாக கிடைக்கக்கூடிய ஒரு மரம் வகை. ஒவ்வொரு கிளைக்கும் ஐந்து இலைகளை கொண்டிருக்கும். இது சளி பிடித்திருந்தால் ஆவி பிடிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இதனுடைய நறுமணம் கொசுக்கள் மற்றும் எலிகளுக்கும் பிடிக்காது.இந்த நொச்சி இலையை சுருட்டி எலிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் வைக்க வேண்டும். அதாவது செடிகள் அதிகம் உள்ள இடங்களில் இந்த எலியானது காணப்படும் அவ்வாறு உள்ள இடங்களில் இந்த நொச்சி இலையை பயன்படுத்தலாம்.
மேலும் சிங் ,வாஷிங் மெஷின் போன்ற இடங்களிலும் உபயோகப்படுத்தலாம். இந்த செடியானது விஷத்தன்மை இல்லாதது .இது சளிக்கு மிகவும் உகந்தது.
இந்த நொச்சி இலையை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த இடத்தில் எலி நடமாட்டம் அதிகமாக இருக்கிறதோ அந்த இடங்களில் வைப்பதன் மூலம் நறுமணம் இருக்கக்கூடும் அதனால் எலிகள் வராது.
இவ்வாறு செய்தால் எலிகள் வரவே வராது ஏனெனில் எலிகளுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம் அதனால் நொச்சி இலையை வைத்த இடங்களில் மீண்டும் எலிகள் அண்டாது.