கரப்பான் பூச்சியால் வீட்டில் அதிக தொல்லையா? அதை விரட்ட இந்த இரண்டு வழிமுறையை செய்யுங்க!!

Photo of author

By Sakthi

கரப்பான் பூச்சியால் வீட்டில் அதிக தொல்லையா? அதை விரட்ட இந்த இரண்டு வழிமுறையை செய்யுங்க
நம்மில் பலரது வீடுகளிலும் கரப்பான் பூச்சி என்பது இருக்கும். கரப்பான் பூச்சிகள் வீட்டில் இருப்பது தில்லை என்றாலும் அது ஒருபுறம் இருந்தாலும் கரப்பான் பூச்சியின் நமக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது.
பொதுவாக கரப்பான் பூச்சிகளை பார்த்தால் பெண்கள் அதிகம் பயப்படுவது பார்த்திருப்போம். இந்த கரப்பான் பூச்சிகளை கண்டால் அருவறுப்பு தோன்றும். இதனால் கரப்பான் பூச்சிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட பல வழிமுறைகளை நாம் பின்பற்றுவோம். ஆனால் நாம் என்னதான் வீட்டை சுத்தமாக  வைத்திருந்தாலும் கரப்பான் பூச்சிகள் வீட்டினுள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.இந்த கரப்பான் பூச்சி தொல்லையை தடுக்க இந்த பதிவில் இரண்டு வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
வழிமுறை 1…
இதில் கரப்பான் பூச்சியின் தொல்லையை தடுக்க ஒரே ஒரு பொருள் போதும். அது பிரியாணி இலைதான். ஆம் பிரியாணி இலையின் வாசம் கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. எனவே பிரியாணி கலையைக் கொண்டு புகை போடுவதால் கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வழிமுறை 2…
கரப்பான் பூச்சியை காட்டுவதற்கு ஒரு சில பொருட்களை வைத்து ஸ்பிரே தயாரித்து பயன்படுத்தலாம்.
ஸ்பிரே தயாரிக்க தேவையான பொருட்கள்…
* கற்பூரம்
* எலுமிச்சை சாறு
* ஸ்பிரே பாட்டில்
* வினிகர்
தயார் செய்யும் முறை…
முதலில் கற்பூரத்தை ஒரு பேப்பரில் போட்டு தூளாக இடித்துக் கொள்ளை வேண்டும். பின்னர் எலுமிச்சை சாறு, வினாயகர் இரண்டையும் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் தூளாக்கிய கற்பூரம், தண்ணீரில் கலந்து வைத்துள்ள வினிகர், எலுமிச்சை சாறு கலவை இரண்டையும் ஸ்பிரே பாட்டிலில் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இந்த கலவையை கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் ஸ்பிரே செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் கரப்பான் பூச்சி தொந்தரவு இருக்காது. இந்த கலவையை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.