உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இந்த எண்ணெயால் விளக்கேற்றினால் போதும்!
கடந்த மழைக்காலங்களில் வீடுகளில் கொசுக்கள் வரத் தொடங்கி விடும். வீட்டைச் சுற்றி தேங்கி இருக்கக்கூடிய கழிவு நீர்களில் கொசுக்கள் உருவாகி நம்மை கடிக்க தொடங்கும்.மேலும் கொசுக்கடியினால் இரவில் தூங்க முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றன. கொசு கடிப்பதனால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, போன்ற வியாதிகள் ஏற்படவும் கொசுக்கள் காரணமாகிறது.
இந்த கொசுக்கள் வராமல் இருப்பதற்கு நாம் கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த மருந்துகளை பயன்படுத்துகிறோம். பல வருடமாக கெமிக்கல் நிறைந்த கொசு கொல்லிகளை பயன்படுத்துவதனால் அது ஸ்லோ பாய்சனாக மாறி நுரையீரலை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.பொதுவாக இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நாம் இந்த கொசுக்கள் வராமல் தடுக்க முடியும்.
வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட தேவையான பொருட்கள் விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், கற்பூரம் இந்த மூன்று பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். விளக்கெண்ணெயுடன் 300 மிலி அளவு வேப்ப எண்ணெய் மற்றும் கற்பூரம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இரவு இந்த எண்ணெயை பயன்படுத்தி விளக்கு ஏற்றும் பொழுது அதனுள் இருந்து வரும் வாசத்திற்கு ஒரு கொசு கூட வராது.
மேலும் எலுமிச்சம் பழம் மற்றும் கிராம்பு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறுத்து அதில் கிராம்பை குத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கொசுக்கள் அதிகம் வரும் இடங்களில் அதாவது ஜன்னல் ஓரங்களில் வைத்து விடுங்கள் எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் கிராம்பு வாசித்திற்கு கொசுக்கள் வரவே வராது.
மேலும் தேங்காய் எண்ணெய் மற்றும் வேம்பு எண்ணெய் இந்த இரண்டு எண்ணெயையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள் இரவு தூங்க போகும் முன் உங்கள் உடலில் கை, கால்களில் நன்றாக தேய்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கொசு கூட உங்களை கடிக்கவே கடிக்காது.