இந்த உலகில் வாழும் மனிதர்களில் கிட்டத்தட்ட இரண்டு சதவீத மக்களுக்கு மட்டுமே நுண்ணறிவு செயல்திறன் 130 க்கு மேல் இருக்கிறது.மீதமுள்ள 98 சதவீத மக்களின் ஐக்யூ லெவல் 115க்குள் இருக்கிறது.
IQ லெவல் என்று சொன்னால் நமக்கும் நியாபகம் வருவது எய்ன்ஸ்டீன் தான்.இவரின் IQ லெவல் மற்றவர்களைவிட அதிகமாகும்.IQ லெவல் 140க்கும் மேல் இருப்பவர்களை அதி புத்திசாலி என்று அழைக்கின்றோம்.IQ லெவல் குறைவாக இருப்பவர்கள் அதை அதிகரிக்க சில விஷயங்களை செய்யலாம்.
எழுத்து பயிற்சி
நமது சிந்தனையை வெளிப்படுத்தும் கருவி தான் எழுத்து பயிற்சி.பள்ளி,கல்லூரி முடிந்ததும் எழுத்துப் பழக்கத்தை நிறுத்திவிடுகின்றோம்.ஆனால் எழுத்து பயிற்சியை தொடர்வதன் மூலம் நுண்ணறிவு திறனை மேம்படுத்தலாம்.
புதிர்களுக்கு விட அறிதல்
புதிர் விளையாட்டு,குறுக்கெழுத்து போன்ற சிக்கலான புதிர்களை கண்டறியும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் IQ லெவல் அதிகரிக்கும்.
தியானம்
மன அழுத்தத்தை கட்டுப்படுத்த தியானம் செய்ய வேண்டும்.இதனால் அறிவாற்றல் அதிகரிக்கிறது.
சதுரங்க விளையாட்டு
சிக்கலை தீர்க்கும் விளையாட்டாக பார்க்கப்படும் சதுரங்க விளையாட்டின் மூலம் நுண்ணறிவு திறனை மேம்படுத்தலாம்.
மொழி கற்றல்
புதிய மொழிகளை கற்றல்,புதிய மொழிகளை எழுதிப் பழகுதல் போன்ற செயல்கள் மூலம் நுண்ணறிவு திறனை மேம்படுத்தலாம்.
யோசித்தல் மற்றும் உணர்தல்
ஒரு செயலை செய்வதற்கு முன்னர் அதை பற்றி முழுமையாக சிந்திக்க வேண்டும்.அந்த செயலை நாம் உணர வேண்டும்.அதை நம் கண் முன்னர் நிறுத்தி தீர்வு காண வேண்டும்.இந்த பழக்கம் நம்மிடம் இருந்தால் IQ லெவல் அதிகரிக்கும்.
இசை கேட்பது
அமைதி தரும் இசையை கேட்பதால் நுண்ணறிவு திறன் மேம்படும்.ஏதேனும் ஒரு நாவலை படித்தல்,தெரியாத விஷயங்களை கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் IQ லெவலை அதிகரிக்கலாம்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல்
கோபம்,பொறாமை,வீண் விவாதம் போன்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டால் IQ லெவல் தானாக உயரும்.ஏதேனும் ஒரு விஷயத்தை ஆழமாக சிந்தித்தல்,தீர்வு காணுதல் போன்ற செயல்கள் மூலம் மூளையின் நுண்ணறிவு திறனை அதிகரிக்கலாம்.