அடிக்கடி உங்கள் வாய் கசப்பாக இருக்கின்றதா? அதுக்கு இஞ்சியை இதில் ஊற வைத்து சாப்பிடுங்க! 

0
173
Is your mouth often bitter? Soak ginger in it and eat it!
Is your mouth often bitter? Soak ginger in it and eat it!
அடிக்கடி உங்கள் வாய் கசப்பாக இருக்கின்றதா? அதுக்கு இஞ்சியை இதில் ஊற வைத்து சாப்பிடுங்க!
நம்மில் அனைவருக்கும் காய்ச்சல் இருக்கும் நேரங்களில் வாய் கசப்புச் சுவையாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு காய்ச்சல் இல்லாத சமயங்களில் கூட வாய் கசப்பாக இருக்கும்.
இது எவ்வாறு உருவாகின்றது என்றால் நம்முடைய வாயில் போதுமான அளவு உமிழ்நீர் சுரக்காத பொழுது பாக்டீரியாக்கள் உருவாகும். இந்த பாக்டீரியாக்கள் தான் நம்முடைய வாயில் கசப்புத் தன்மையை ஏற்படுத்துகின்றது. இதை எவ்வாறு குணப்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* இஞ்சி
* எலுமிச்சம் பழம்
செய்முறை…
முதலில் இஞ்சி சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த இஞ்சியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்து அதன் சாற்றை அந்த பவுலில் பிழிந்து கொள்ளவும்.
இறுதியாக நாம் நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை எலுமிச்சை சாற்றில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். எலுமிச்சம் பழத்தின் சாற்றில் இஞ்சி ஊறிய பின்னர் இதை நாம் சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் பொழுது வாய் கசப்புத் தன்மை சரியாகும்.
Previous articleஉங்கள் கைகளில் உள்ள நகங்களை சுத்தமாக்க வேண்டுமா? அதுக்கு துளசி மற்றும் புதினா மட்டும் போதும்! 
Next articleஉங்களுக்கு மூட்டு வலி அதிகமாக உள்ளதா? முருங்கைக் கீரையை இப்படி பயன்படுத்துங்க!