உங்க நெக் மட்டும் கருப்பாக அசிங்கமா இருக்கா? இதற்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி இதோ!!

Photo of author

By Gayathri

பெரும்பாலான பெண்களின் கழுத்து கருமையாக இருக்கிறது.முக பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் கழுத்தை பராமரிக்க தவறுகின்றனர்.இதனால் டெட் செல்கள்,எண்ணெய் பிசிசுக்குகள் அதிகளவு தேங்கி அவ்விடத்தை கருமையாக்கிவிடுகிறது.இந்த கழுத்து கருமையை போக்கும் சிறந்த ஹோம் ரெமிடி இதோ.

தீர்வு 01:

1)எலுமிச்சை சாறு
2)சர்க்கரை

முதலில் நன்கு கனிந்த எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு பௌலில் பிழிந்து ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து எலுமிச்சை தோல் கொண்டு ஸ்கரப் செய்யவும்.இப்படி தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் செய்து வந்தால் கழுத்து பகுதியில் காணப்படும் கருமை,எண்ணெய் பிசுக்கு அனைத்தும் நீங்கிவிடும்.

தீர்வு 02:

1)ஆரஞ்சு பழ தோல்
2)பசும் பால்

ஒரு ஆரஞ்சு பழ தோலை வெயிலில் நன்றாக காயவையுங்கள்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.

இந்த பொடியில் காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு கழுத்தை சுற்றில் ரோஸ் வாட்டர் அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.பிறகு தயாரித்து வைத்துள்ள ஆரஞ்சு பேக்கை கழுத்தை சுற்றி அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு உலரவிடவும்.பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுத்தை சுத்தம் செய்யவும்.இந்த ஆரஞ்சு பேக் கழுத்து கருமையை முழுவதுமாக நீக்கிவிடும்.

தீர்வு 03:

1)வெங்காயச் சாறு
2)ரோஸ் வாட்டர்

முதலில் ஐந்து முதல் 10 வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த சாறில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கழுத்தை சுற்றி அப்ளை செய்யவும்.பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுத்தை சுத்தம் செய்யவும்.இப்படி தினமும் செய்து வந்தால் கழுத்து கருமைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.