சமீப காலமாகவே அதிக அளவில் ஓய்வூதியம் செலுத்தக்கூடிய வங்கிகள் தங்களுடைய வங்கிகளில் உள்ள ஓய்வூதியம் பெறக்கூடியவர்களுக்கு அல்லது ஓய்வூதிய நிலுவைத் தொகையை திருப்பி வழங்குவதற்கு மிகவும் காலதாமதம் செய்வதாக புகார்கள் எழுந்து வந்து இருக்கின்றன. இவற்றை சரி செய்யும் விதமாக இனி ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8% பட் யானது வழங்கப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
இந்த வட்டி விகிதமானது ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீடாகவும் வங்கிகள் மூலம் செலுத்தப்படக்கூடிய ஓய்வூதிய பணத்தோடு இந்த வட்டியானது சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்றும் ஏப்ரல் 1 2025 அன்று இந்தியன் ரிசர்வ் வங்கி திருத்தப்பட்ட ஏஜென்சி வங்கிகள் மூலம் அரசு ஓய்வூதியம் வழங்கப்படுதல் என்ற பிரிவின் கீழ் தெரிவித்திருக்கிறது.
இதில் முக்கியமாக திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்கக்கூடிய வங்கிகள் அதற்கான வட்டியை ஓய்வூதியதாரர்களுக்கு தானாகவே சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்றும் தாமதமான ஓய்வூதியத்திற்கான வட்டியை செலுத்தும் அம்சம் என்ற முதன்மை திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த இழப்பீடு வழங்குவது என்பது தாமதம் செய்யப்பட்டால் அந்த தாமதத்திற்கும் சேர்த்து வட்டியானது விதிக்கப்படும் என்றும் அந்த வட்டியையும் இணைத்து ஓய்வூதியதாரர்களுக்கு கட்டாயமாக வங்கிகள் வழங்கிய தீர வேண்டும் என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி திரும்பத் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அக்டோபர் 1 2008 ஆம் ஆண்டு தாமதமாக செலுத்தப்படக்கூடிய அனைத்து ஓய்வூதிய தொகைகளுக்கும் பங்கியானது கட்டாயமாக எந்தவித கோரிக்கையும் இல்லாமல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்த இழப்பீடு ஓய்வூதியதாரரின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஓய்வூதியம் வழங்கக்கூடிய அனைத்து முகமை வங்கிகளும் ஓய்வூதியதாரர்களுக்கு உரிய மரியாதை அக்கறை அனுதாபம் என அனைத்தையும் வழங்கி அவர்களுடைய சேவைகளை திருப்திகரமாக முடிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.