சமிபத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கக்கூடிய நபர்கள் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறக்கூடாது என்றும் அவ்வாறு ஏறினால் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் இந்தியன் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்று முன்பதிவு செய்த பலர் வெயிட்டிங் லிஸ்டில் அதிகமாக இருக்கின்றனர். இதனை சில முன்கூட்டிய முன்னெடுப்புகளின் மூலம் மாற்ற முடியும்.
IRCTC இணையத்தில் பெரும்பாலான பயணிகள் தவிர்க்கக்கூடிய அல்லது தெரிந்திருக்காத வசதி alternate train accommodation அல்லது Vikalp Scheme இந்த வசதிகளை டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது பயன்படுத்தினால் உங்களுடைய டிக்கெட் உறுதியாக அதற்கு அதிக அளவு வாய்ப்புகள் உள்ளன. எனினும் இந்த வசதியின் மூலம் ரயிலின் இருக்கை கிடைக்கும் தன்மை எப்படி இருக்கிறது என்பது பொறுத்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரயில் பயணத்தின் போது வெயிட்டிங் லிஸ்டில் இருக்கக்கூடிய டிக்கெட்டுகளை கன்ஃபார்ம் செய்வதற்கான வழிமுறைகள் :-
✓ பொதுவாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது இரவு 11 மணி முதல் 12 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும். காரணம் அந்த நேரத்தில்தான் குறைவான போக்குவரத்து மற்றும் செயலிகளின் அமைப்பு வேகமாக வேலை பார்க்கும்.
✓ டிக்கெட் முன்பதிவானது ஒரு சிறிய ரயில் நிலையத்திலிருந்து முன்பதிவு செய்யும் பட்சத்தில் உடனடியாக இருக்கையுடன் கூடிய டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உதாரணத்திற்கு மதுரையிலிருந்து சென்னை செல்ல வேண்டும் என்றால் நெல்லையிலிருந்து டிக்கெட்டை புக் செய்வதன் மூலம் டிக்கெட் கன்ஃபார்மாக வாய்ப்புகள் அதிகம்.
✓ அதேபோன்று தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பொழுதும், autofill edition என்ற முறையை பயன்படுத்துவதன் மூலம் நேரம் பார்த்து முன்பதிவு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் டிக்கெட் உறுதி செய்யப்படும்.
✓ ஒருவேளை உங்களுடைய டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால் நேரடியாக ரயில் நிலையத்திற்கு சென்று விளக்கப்படும் தயாரிக்கப்பட்ட பிறகு ரயில் TTE யிடம் பேச வேண்டும். சில நேரங்களில் காலியான இருக்கைகள் வீதம் இருக்கும் அவற்றை அவரிடம் நேரில் சென்று பேசும்பொழுது ரயில் நிலையத்திலிருந்து ஏறுபவர்களுக்கு வழங்கப்படும்.