அக்குள் முடி வளர்ந்து கொண்டே இருக்கிறதா! வலி இல்லாமல் அக்குள் முடியை நீக்க இதை மட்டும் தடவுங்கள்!!
நம் அக்குளில் இருக்கும் முடியை வலி இல்லாமல் நீக்குவதற்கு ஒரு சிறப்பான மருத்துவ முறையை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் உடலில் பல இடங்களில் முடி வளரும். முகத்தில், அக்குளில், பிறப்புறுப்பு இருக்கும் பகுதியில், கை கால்களில் என முடிகள் வளராத இடமே இருக்காது. அவ்வாறு முடிகள் இருக்கும் ஒரு இடமான அக்குளில் இருக்கும் முடியை வலி இல்லாமல் நீக்கலாம். இதை எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதை செய்ய தேவையான பொருள்கள்…
* ஊறவைத்த ஆலிவ் விதைகள்
* முட்டை(வெள்ளைக் கரு மட்டும்)
* சமையல் சோடா
* மஞ்சள்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை…
ஊறவைத்து எடுத்துள்ள ஆலிவ் விதைகளில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சமையல் சோடா சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியாக இதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக இவை அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். ஒரு ஜெல்லி வடிவத்தில் இந்த மருந்து கிடைக்கும். அக்குளில் இருக்கும் முடியை வலி இல்லாமல் நீக்கும் மருந்து தயாராகி விட்டது.
இதை பயன்படுத்தும் முறை…
இந்த மருந்தை எடுத்து நம் அக்குளில் இருக்கும் முடியின் மீது தேய்த்துவிட வேண்டும். ஒரு பத்து நிமிடம் கழித்து இதை தேய்க்கும் பொழுது முடிகள் உதிரத் தொடங்கும். இரண்டு முதல் மூன்று முறை இந்த முறையை பயன்படுத்தி நம் அக்குள் முடியை நீக்கிக் கொள்ளலாம்.