கொட்டிப் போன முடிகள் மீண்டும் வளர வேண்டுமா! அப்போ இதை பண்ணுங்க போதும்!!

0
40

கொட்டிப் போன முடிகள் மீண்டும் வளர வேண்டுமா! அப்போ இதை பண்ணுங்க போதும்!!

 

நம் தலையில் முடிகள் உதிர்ந்து அந்த இடம் வழுக்கை விழுந்திருக்கும். இதை சரி செய்ய நாம் மருந்து மாத்திரைகள், பலவிதமான எண்ணெய்கள், சிகிச்சைகள் எடுத்திருப்போம். ஆனால் எதுவும் பயன் தந்திருக்காது. முடி கொட்டுகிறதே முடி கொட்டி வழுக்கை விழுந்துவிட்டதே என்று கவலைப்படும் அனைவருக்கும் அந்த பிரச்சனையை சரி செய்ய அருமையான மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

இந்த பதிவில் கூறப்படும் மருத்துவ முறையை பயன்படுத்தினால்முடி கொட்டாது. பொடுகுத் தொல்லை ஏற்படாது. மேலும் முடி நன்கு கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும். அது என்ன மருத்துவ முறை என்று பார்க்கலாம்.

 

இந்த மருத்துவ முறையை செய்ய தேவையான பொருள்கள்…

 

* கருஞ்சீரகம் – 2 1/2 ஸ்பூன்

* வெந்தயம் – 2 1/2 ஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் – 200 மிலி

 

இதை செய்யும் முறை…

 

முதலில் கருஞ்சீரகம் இரண்டரை ஸ்பூன் எடுத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.

 

பிறகு வெந்தயம் இரண்டரை ஸ்பூன் எடுத்து மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

அடுத்து கருஞ்சீரகப் பொடியையும் வெந்தயப் பொடியையும் நன்கு கலந்து கொண்டு எடுத்துக் கொள்ளவும்.

 

கடைசியாக இதில் 200 மிலி தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளவும். அடுத்து இந்த எண்ணெயை சூடு செய்ய வேண்டும்.

 

அதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து  ஒரு பாத்திரம் வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

 

தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது கலந்து வைத்துள்ள எண்ணெய் பாத்திரத்தை இந்த தண்ணீரில் மிதக்குமாறு வைக்க வேண்டும்.

 

எண்ணெய் ஓரளவு சூடான பிறகு எடுத்து வேறொரு பாத்திரத்தில் மாற்றி இதை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை ஒரு பஞ்சு வைத்து தொட்டு அதை தலையில் தேய்க்க வேண்டும். தேய்த்து விட்டு மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து சேம்பு அல்லது சீவைக்காய் வைத்து கழுவி விடவேண்டும்.

 

இது போல தொடர்ந்து செய்து வந்தால் நம் தலை முடியில் நல்லதொரு மாற்றத்தை நாம் உணரலாம். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடி கொட்டாது.  நரை முடி வளராது. தலைமுடி அடர்த்தியாக வளரும். பொடுகுத் தொல்லை குணமாகும். முடி கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளரத் தொடங்கும்.

 

கருஞ்சீரகத்தின் நன்மைகள்…

 

* கருஞ்சீரகம் நம் தலையில் வழுக்கை விழும் வாய்ப்பை தடுக்கின்றது.

 

* தலைமுடி உதிர்வதை தடுக்கின்றது.

 

* நரைமுடி வருவதை குணப்படுத்துகின்றது.

 

* வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர உதவி செய்கின்றது.

 

வெந்தயத்தின் நன்மைகள்

 

* வெந்தயத்தில் ஸவைட்டமின் சி, பொட்டாசியம், அயர்ன், புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளது.

 

* வெந்தயம் நமக்கு இளநரை ஏற்படுவதை தடுக்கின்றது.

 

* முடி நன்றாக வலிமையாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும்

வளர்வதற்கு இந்த வெந்தயம் பயன்படுகின்றது.

 

தேங்காய் எண்ணெயின் பயன்கள்…

 

* தேங்காய் எண்ணெய் நமது முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

 

* தேங்காய் எண்ணெய் தலையில் இருக்கும் பொடுகுத் தொல்லை பிரச்சனையை சரி செய்யும்.